மாணவிக்கு மிரட்டல்: எஸ்பி-யிடம் புகார்
சேலம், ஆக. 4 – பள்ளிக்கு செல்லும் போது, இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொள்ளும்படி மிரட்டல் விடுவதால் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பெற்றோர்கள் புகார் அளித் தனர். சேலம் ஓமலூர் பகுதியை சேர்ந்த மாணவியின் பெற் றோர் கூறுகையில், 11 ஆம் வகுப்பு படிக்கும் தன் மக ளுக்கு, அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் திரு மணம் செய்து கொள்ளும்படி மிரட்டல் விடுக்கிறார். சில நேரங்களில் பாலியல் சீண்டலில் ஈடுபடுகிறார். இதுகுறித்து, தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பள்ளி செல்லும் மாணவிக்குதொடர்ந்து தொல்லை கொடுத்து வரும் இளை ஞரை கைது செய்ய வேண்டும் குடும்பத்தாருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாள ரிடம் புகார் அளிக்க வந்ததாக தெரிவித்தார்.
அடிப்படை வசதிகள் கேட்டு போராட்டம்
கோவை, ஆக.4 - கோவை மாவட்டம், சூலூர் வட்டம் கலங் கல் பேரூராட்சிக்குட்பட்ட தென்றல் நகர் பகு தியின் அடிப்படை வசதிகளை இந்த முறையா வது மாவட்ட ஆட்சியர் தீர்ப்பாரா என்று பதாகைகள் வைத்தும், ஏற்கனவே மாவட்ட ஆட்சியருக்கு அளித்த மனுவின் ரசீதை பிளக்ஸ் பேனராக வைத்தும் அப்பகுதி பொதுமக்கள் திங்களன்று ஆட்சியர் அலுவ லகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அப்பகுதி மக்கள், கடந்த 10 வருட மாக குடிநீர் விநியோகம் இல்லை, சாலை வசதி இல்லை கலங்கள் ஊராட்சியில் ஏமாற் றத்தை மட்டுமே சந்தித்திருக்கும் தென்றல் நகர் பொதுமக்கள் இது குறித்து மூன்று முறை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எந்த விதமான தீர்வு இல்லை. மேலும் இது தொடர்பாக பத்து முறை முதல்வர் தனிப்பிரிவுக்கு மனு கொடுத் தோம் தீர்வு காணப்படும் என்று குறுஞ் செய்தி மட்டுமே வந்துள்ளது. ஆனால், தற் பொழுது வரை எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து அரசு அதி காரிகளிடம் கேட்டால் அலட்சியமாக பதில் அளிக்கின்றனர். உடனடியாக தென்றல் நகர் பொதுமக்க ளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண் டும். இல்லை என்றால் விரையில் கோவை - திருச்சி சாலையில் மறியல் உள்ளிட்ட போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்த னர்.
பூங்காவில் விளையாடிய யானை
உதகை, ஆக.4- குழந்தைகள் விளையாடும் பூங்காவில் நுழைந்து ராட் டினத்தை சுற்றி விளையாடிய காட்டு யானையின் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகேயுள்ள தமிழக எல்லையை ஒட்டி கேரளம் மாநிலம் வயநாடு மாவட்டம் அமைந்துள்ளது. அங்கு வைதீரி பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஹனி மியூசியம் அருகே உள்ள குழந்தைகள் பூங்காவில் ஞாயிறன்று இரவு ஒரு காட்டு யானை நுழைந்தது. அங்கு அமைக்கப்பட்டிருந்த ராட்டினத்தை (மெரி-கோ-ரவுண்ட்) தனது தும்பிக்கையால் சுற்றி விளையாடிய அந்த யானையின் காட்சி, அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சி தற்போது வலை தளங்களில் பகிரப்பட்டு தற்போது வைரலாகி வருகிறது.
அணைகள் நிலவரம் (திங்கட்கிழமை)
பவானிசாகர் அணை
பவானிசாகர் அணை நீர்மட்டம்:101.50/105அடி நீர்வரத்து:4521கனஅடி நீர்திறப்பு:2300கனஅடி சோலையார் அணை நீர்மட்டம்:160/160 அடி நீர்வரத்து:1942கனஅடி நீர்திறப்பு:1719கனஅடி பரம்பிக்குளம் அணை நீர்மட்டம்:71.86/72 அடி நீர்வரத்து:2583கனஅடி நீர்திறப்பு:1677கனஅடி ஆழியார் அணை நீர்மட்டம்:118/120அடி நீர்வரத்து:889கனஅடி நீர்திறப்பு:1051கனஅடி திருமூர்த்தி அணை நீர்மட்டம்:52.88/60அடி நீர்வரத்து:962கனஅடி நீர்திறப்பு:1081கனஅடி அமராவதி அணை நீர்மட்டம்:88.52/90அடி நீர்வரத்து:1019கனஅடி நீர்திறப்பு:915கனஅடி