tamilnadu

img

தெப்பக்காடு யானைகள் முகாம் மூடல்

தெப்பக்காடு யானைகள் முகாம் மூடல்

உதகை, செப்.19- தெப்பக்காடு யானைகள் முகாம் செப்.23 முதல் 26 ஆம் தேதி வரை மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வனச்சரக அலுவலர் மேகலா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் மற்றும் துணை இயக்குநர் ஆகியோரின் உத்தரவுகளின்படி, செப்.23 முதல் 26 ஆம் தேதி வரை தெப்பக்காட்டில் தென்மண்டல பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, தெப்பக்காடு யானைகள் முகாம் இயங்காது. மேலும், சூழல் சுற்றுலா சவாரி, யானைகளுக்கு உணவு அளிக்கும் முகாம்களுக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.