tamilnadu

img

மின் மோட்டார் ஒயர்கள் திருட்டு: டிஎஸ்பியிடம் புகார்

மின் மோட்டார் ஒயர்கள் திருட்டு: டிஎஸ்பியிடம் புகார்

உடுமலை, ஆக 23- விவசாய நிலங்களில் இருக் கும் மின் மோட்டார், ஒயர்களை திருடும் கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும் என  உடுமலை காவல்துறை துணை  கண்காணிப்பாளரிடம், சனி யன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் புகார் அளித்தனர். இது குறித்து அப்புகார் மனு வில் தெரிவித்துள்ளதாவது, உடு மலை,குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதியில் இருக் கும் விவசாய நிலங்களில் இருக் கும் மின் சாதன பொருட்கள்  திருட்டு தொடர்ச்சியாக நடை பெற்று வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என பல முறை  காவல்துறையில் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கை யும் எடுக்காத நிலைதான் உள்ளது. இந்நிலையில், தற்பொழுது குடிமங்கலம் பகுதியில் விவ சாய நிலங்களுக்கு வரும் மின் இணைப்புகளில்  மின்வாரி யத்திற்கு சொந்தமான மின்மாற்றியில் (டிரன்ஸ்பாரம்) இருக் கும் பெட்டிகளை திருட தொடங்கி உள்ளனர். மின் சாதனங் களை திருடும் நபர்களை பிடிக்காவிட்டால் தனியாக இருக் கும் தோட்டத்து சாலைகள் மற்றும் மலைஅடிவாரப் பகுதியில்  இருக்கும் விவசாயிகளின் உயிருக்கும் உடமைக்கும் பாது காப்பு என்பது கேள்விக்குள்ளாகும். எனவே, உடனடியாக  கொள்ளையர்களை கைது செய்ய வேண்டும் என தெரி வித்துள்ளனர்.  புகார் மனுவை பெற்றுக்கொண்ட உடுமலை காவல் துறை கண்காணிப்பாளர், இம்மாதம் இறுதிக்குள் குற்றவாளி களை பிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என  விவசாய சங்கத்தலைவர்களிடம் தெரிவித்துள்ளார். முன்ன தாக தமிழ்நாடு விவசாய சங்கத்தின் நிர்வாகிகள் எஸ்.ஆர். மதுசூதணன், உடுகம்பாளையம் பரமசிவம், கண்ணமநாயக் கனூர் செல்வராஜ் உள்ளிட்ட திரளான விவசாயிகள்  கலந்து கொண்டார்கள்.