tamilnadu

நச்சேரி பழங்குடியின மக்களின் துயரம்

நச்சேரி பழங்குடியின மக்களின் துயரம் தனியார் ஆக்கிரமிப்பால் துண்டிக்கப்பட்ட பாதை

உதகை, ஜூலை 25 – தனியார் ஆக்கிரமிப்பால் சாலை துண்டிக்கப்பட்ட நிலையில் நச்சேரி பழங்குடியின மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா, சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட அய்யன்கொல்லி - எரு மாடு சாலையில், நச்சேரி கிராமம் உள்ளது. இங்கு சுமார் 20 குடும்பங் களைச் சேர்ந்த பழங்குடியினரான காட்டு நாயக்கர் மக்கள் பல தலை முறைகளாக வசித்து வருகின்ற னர். தற்போது, பல்வேறு சிக்கல் களை எதிர்கொண்டு, தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிக ளைப் போல் அவதியுறுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து இவர்கள் கூறுகையில், எங்கள் கிராமத்திற்கு எவ்வித அடிப் படை வசதிகளும் இல்லை. தற் போது கிராமத்திற்கு செல்லும் முகப் புப் பகுதியில், “தனியார் சாலை”  என அறிவிப்புப் பலகை வைக்கப் பட்டு, தனியார் தோட்டத்தால் பாதை அடைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒற்றையாடி பாதை கிரா மத்திற்குள் நுழையாதவாறு தடுப் புச் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், வெளியுலகத் தொடர் பின்றி, மருத்துவமனைக்கோ, பள் ளிக்கோ செல்ல முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றனர்.  சமூக ஆர்வலர்கள் கூறுகை யில், மண்ணின் மைந்தர்களான பழங்குடியினர், பல தலைமுறைக ளாக இங்கு வசித்து வந்தாலும், சாலை, மருத்துவமனை, பள்ளி போன்ற எந்தவித அடிப்படை வசதி களும் இவர்களுக்குக் கிடைக்க வில்லை. அரசு பழங்குடி மக்களுக் குப் பல்வேறு சலுகைகளை அறி வித்த போதிலும், அவை நச்சேரி  காட்டு நாயக்கர் மக்களைச் சென்ற டையவில்லை. தனியார் நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் இவர் களை இங்கிருந்து வெளியேற்ற முயற்சிகள் மேற்கொள்வதாகவும் கூறப்படுகிறது. ஆனால், பல ஆண்டுகளாக வசித்து வரும் தங் கள் குலதெய்வத்தை விட்டு வேறு இடத்திற்கு மாற முடியாது என பழங்குடி மக்கள் உறுதியாகத் தெரிவித்து வருகின்றனர். சாலையில்லாததால், மக்கள் காட்டுப் பாதைகளில் நடந்து செல் கின்றனர். இதனால், காட்டு யானை கள் நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில், உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கனவே காட்டு யானைத் தாக்குதலில் உயிரி ழப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே, நச்சேரி காட்டு நாயக்கர் மக்கள், தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வா கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை யில், தங்கள் வீடுகளைப் பாது காக்க நிரந்தர வீட்டு வசதி ஏற்ப டுத்தித் தரவேண்டும. அத்தியாவசி யமான சாலை வசதியை ஏற்படுத் தித் தர வேண்டும் என்றனர்.