tamilnadu

img

கோயம்புத்தூரின் அழகு - புகைப்பட கண்காட்சி

கோயம்புத்தூரின் அழகு - புகைப்பட கண்காட்சி

கோவை, ஆக.19- பாரதியார் பல்கலையில் உலக புகைப்பட விழாவை முன்னிட்டு  கோயம்புத்தூரின் அழகு என்ற தலைப் பில் இரண்டு நாள் புகைப்பட கண் காட்சி நடைபெற்றது. கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் தகவல் தொடர்பு மற்றும் ஊடகவியல் துறை, கோயம்புத்தூர் பத்திரிகையாளர் மன்றம், கேனான் நிறு வனம், அபிநயாலயாவுடன் இணைந்து  உலக புகைப்பட நாள் 2025 விழாவை  ஆகஸ்ட் 19, 20 தேதிகளில் பல்கலைக் கழக வளாகத்தில் புகைப்பட கண் காட்சி நடத்தி வருகிறது. செவ்வா யன்று முதல் நாள் நிகழ்ச்சியை  பல் கலைக்கழகப் பதிவாளர் ராஜவேல்  தொடங்கி வைத்தார். “கோயம்புத்தூ ரின் அழகு” என்ற தலைப்பில் நடந்த புகைப்படக் கண்காட்சியில், கோவை புகைப்பட பத்திரிகையாளர்களின் அருமையான படைப்புகள் காட்சிப் படுத்தப்பட்டன. செந்தில்குமாரின் வன விலங்கு புகைப்படங்கள் பார்வையா ளர்களை இயற்கையின் அழகுக்கு கூட் டிச் சென்றது. கேனன் நிறுவனம்  புதிய கேமராக்கள் மற்றும் தொழில் நுட்பங்களை அறிமுகப்படுத்தி, பயிற்சி  வகுப்புகளையும், உபகரணக் கண் காட்சியையும் நடத்தியது. இதில் புகைப் பட ஆர்வலர்களும், தொழில்முறை கலைஞர்களும் புதிய நுட்பங்களைக் கற்றுக்கொண்டனர். புகைப்பட நிகழ்ச்சிகளுக்கு இடையே, உணவு, ஆடை, அணிகலன் கடைகள் போன்ற ஸ்டால்களும் மக் களை கவர்ந்தன. புகைப்படப் போட்டி கள், கலந்துரையாடல்கள், தொழில் முறை வல்லுநர்களுடன் பேசும் நிகழ்வு களும் நடந்தன. இன்று (ஆகஸ்ட் 20)  இரண்டாவது நாள் நிகழ்ச்சிகள் காலை  10 மணி முதல் மாலை 5 மணி வரை  நடைபெறும். இந்த புகைப்பட கண் காட்சியை காண நுழைவு கட்டணம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.