தருமபுரியில் 7 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழா துவங்கியது!
தருமபுரி, செப்.26- தருமபுரி 7 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவை இந்திய ஆட்சிப்பணி ஓய்வு வெ.இறையன்பு துவக்கி வைத்து, புத்தக அரங்குகளை பார்வை யிட்டார். தருமபுரி புத்தகத் திருவிழாவை மாவட்ட நிர்வாகம், மாவட்ட நூலகத் துறை, தகடூர் புத்தகப்பேரவை, பாரதி புத்தகாலயம் இணைந்து 7 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவை நடத்து கின்றன. சுந்தரராஜராவ் திருமண மண்டபத்தில் 10 நாட்கள் நடைபெறும் இப்புத்கத் திருவிழாவின் துவக்க நிகழ்ச்சி வெள்ளியன்று நடைபெற்றது. ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வெ. இறையன்பு துவக்கி வைத்தார். துவக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் ரெ. சதீஷ் தலைமை வகித்தார். தகடூர் புத்த கப்பேரவை தலைவர் இரா.சிசுபாலன் வரவேற்றார். பின்னர் நடைபெற்ற கருத் தரங்கில் ‘வையத் தலைமைகொள்’ என்ற தலைப்பில் வெ.இறையன்பு பேசினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான்மாது, கோட்டாட்சியர் காயத்திரி, தகடூர் புத்த கப் பேரவை பொருளாளர் மு.கார்த்தி கேயன், கடத்தூர் வட்டார வளர்ச்சி அலு வலர் எம்.சுருளிநாதன், காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர்.மனோ கரன், மாவட்ட கல்வி அலுவலர் (ஓய்வு) சி.ராஜாசேகர், பாரதி புத்தகாலயம் மேலாளர் க. நாகராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் கவிதா நன்றி கூறினார். நாள்தோறும் புத்தகம் தொடர்பான நிகழ்வுகள், மாலை 5 மணி முதல் கலைநிகழ்ச்சிகள், மாலை 6 மணி முதல் சிறந்த கருத்தாளர்கள் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.