ததீஒமு தாலுகா மாநாடு
சேலம், ஜூலை 13- தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சங்ககிரி தாலுகா மாநாட்டில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகா மாநாடு ஞாயிறன்று, ஆர்.பழனி சாமி தலைமையில் நடைபெற்றது. விவசாயத் தொழிலா ளர்கள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சேகர் துவக்கவு ரையாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செய லாளர் ஏ.ராமமூர்த்தி, விசிக தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் சுதா லட்சுமி, தமிழ் புலிகள் அமைப்பின் மாவட் டச் செயலாளர் குருசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். ஜூலை 27 ஆம் தேதியன்று சங்ககிரியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட மாநாட்டினை சிறப்பாக நடத்திடு வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து சங் கத்தின் சிறப்புத் தலைவராக வழக்கறிஞர் ஆர்.ராமசாமி, தலைவராக என்.ஜெயலட்சுமி, துணைத்தலைவர்களாக சுதா லட்சுமி, எம்.குருசாமி, செயலாளராக டி.செந்தில்குமார், துணைச்செயலாளர்களாக ஆர்.பழனிசாமி, ஆர்.ராஜேந் திரன், பொருளாளராக ஆர்.ஜான்சன் மற்றும் கமிட்டி உறுப் பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். தீண்டாமை ஒழிப்பு முன் னணி மாவட்டத் தலைவர் ஆர்.குழந்தைவேல் நிறை வுரையாற்றினார். ஆர்.பழனிவேல் நன்றி கூறினார்.