tamilnadu

img

தமுஎகச பொன்விழா நிறைவுக் கொண்டாட்டம்!

தமுஎகச பொன்விழா நிறைவுக் கொண்டாட்டம்! எம்.ஏ. பேபி - கனிமொழி எம்.பி. - ஆர்.பாலகிருஷ்ணன் ஐஏஎஸ் பங்கேற்பு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்- கலைஞர்கள் சங்கத்தின் பொன்விழா ஆண்டு நிறைவு கொண்டாட்டம், 
சென்னை- தி.நகரில் சனிக்கிழமையன்று (ஜூலை 12) நடைபெற்றது. நிறைவு அமர்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் எம்.ஏ. பேபி சிறப்புரையாற்றினார். திமுக துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி., தமுஎகச மதிப்புறு தலைவர் சு. வெங்கடேசன் எம்.பி.,  தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம், பொதுச் செயலாளர் 
ஆதவன் தீட்சண்யா, பொருளாளர் சைதை ஜெ, முன்னாள் தலைவர்கள் பேரா. அருணன், ச. தமிழ்ச்செல்வன், வரவேற்புக்குழுச் செயலாளர் கி.அன்பரசன், பொருளாளர் பா. ஹேமாவதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

சென்னை, ஜூலை 12 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர் -கலைஞர்கள் சங்கத்தின் பொன்  விழா ஆண்டு நிறைவுக் கொண் டாட்டம் சனிக்கிழமையன்று (ஜூலை 12) சென்னை தி.நகரில்,  சர் பிட்டி தியாகராயர் கலையரங்கத்  தில் நடைபெற்றது. தமுஎகச மாநிலச் செயற்குழு உறுப்பினர் எஸ்.ஏ. பெருமாள், ஆர்.  இளங்கோவன் ஆகியோர், கலை வாணர் என்.எஸ்.கிருஷ்ணன் உரு வப்படத்திற்கு மாலை அணிவித்து, நிகழ்வுகளைத் தொடங்கி வைத்த னர். மாநிலத் துணைத்தலைவர் ஆர். நீலா தலைமையில் நடைபெற்ற  கலை அமர்வில், முனைவர் ஆர். காளீஸ்வரன் ஒருங்கிணைப்பில் மாற்று ஊடக மையத்தின் பறை  முழக்கம் நடைபெற்றது. பிரபாகரன் காசிராஜன் உருவாக்கிய, ‘தமிழ்ச் சமூகத்தில் தமுஎகசவின் 50 ஆண்டு படைப்பிலக்கியம் ஏற்படுத்திய தாக்கம்’ பற்றி விவரிக்கும் நிர்மாண  கலை வடிவத்தை மாநில துணைத் தலைவர்- திரைக்கலைஞர் ரோகிணி திறந்து வைத்தார். மாநிலப் பொருளாளர் கவிஞர்  சைதை ஜெ, செயற்குழு உறுப்பி னர் இரா.தெ. முத்து ஆகியோர் புத்த கக் காட்சியை திறந்து வைத்தார். சொல்லிசை சிஸ்டர்ஸ்-சின் நவீன ராப் பாடல்கள், தமுஎகச கலைஞர்களின் இடம்பெற்றன.  அதைத்தொடர்ந்து, வர வேற்புகுழுச் செயலாளர் கி. அன்ப ரசன் வரவேற்க நிறைவுக் கொண்டா ட்டத்தின் துவக்க அமர்வு தொடங்கி யது. தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் நடைபெற்ற துவக்க அமர்வை, மாநிலத் துணைத்தலைவர் சிகரம் ச.செந்தில்நாதன் தொடங்கி வைத் தார்.  மக்களின் வரலாறே உண்மையான வரலாறு வரவேற்புக்குழுத் தலைவ ரும்- சிந்துவெளி ஆய்வாளரும்  ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரியு மான ஆர். பாலகிருஷ்ணன் கருத்து ரையாற்றினார். அப்போது, “செயல்தான் ஆகச்