tamilnadu

img

பழிவாங்கும் நோக்கில் விவசாயிகள் மீது அபராதம் விதிக்கும் வனத்துறை அதிகாரிகள்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்

பழிவாங்கும் நோக்கில் விவசாயிகள் மீது அபராதம் விதிக்கும் வனத்துறை அதிகாரிகள்: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்

உடுமலை,செப்.12- உடுமலை பகுதியில் விவசாயிக ளுக்கு வனத்துறை அதிகாரிகள் மற்றும்  வன விலங்குகளால் அதிக பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும், இதை உடனடி யாக மாவட்ட நிர்வாகம் சரி செய்ய  வேண்டும் என வலியுறுத்தி, வெள்ளி யன்று உடுமலை வனச்சரக அலுவல கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தினர் வனத் துறைக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில், தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தின் சார்பில் உடுக்கம்பா ளையம் பரமசிவம், பாலதண்டபாணி, ராஜகோபால், செல்வராஜ் மற்றும் தென்னை விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அருண் பிரகாஷ்  உட்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு விவசா யிகள் சங்கத்தினர் பேசுகையில்,  உடு மலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்கு ளம் பகுதிக்கு உட்பட்ட உடுமலை, அம ராவதி மற்றும் கொழுமம் பகுதி வனச்ச ரக அதிகாரிகள் தொடர்ச்சியாக விவசா யிகளை பழிவாங்கும் நோக்கில் வன விலங்குகளை தாக்கினார்கள் என்று அபராதம் விதிப்பது தொடந்து வருகி றது. வனவிலங்குகளான யானை, காட் டுப்பன்றி, குரங்கு மற்றும் மயில் கள் விளைநிலங்களை தொடர்ச்சியாக  சேதப்படுத்தி வருகிறது. விளைநிலங் கள் மற்றும் விளைநிலங்களில் இருக் கும் தண்ணீர் குழாய்களை சேதப்ப டுத்தி வந்த வனவிலங்குகள் தற்போது  விவசாயிகளை தாக்கத் தொடங்கி உள் ளது. இவற்றைத் தடுக்க வேண்டிய வனத்துறை அதிகாரிகள் விவசாயிகள் மீது அபராதம் விதிப்பதை மட்டுமே வேலையாகக் கொண்டுள்ளனர். மேலும் வன விலங்குகளால் ஏற்படும் பாதிப்புக்கு உரிய நேரத்தில் இழப்பீடு தொகை கிடைப்பது இல்லை என கடு மையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர். விவசாயிகளின் குறைகளை கேட் கும் கூட்டம் முறையாக மாதம் ஒரு  முறை ஐந்தாம் தேதி நடத்த வேண்டும்.  இந்த கூட்டத்தில் வனத்துறை அதிகா ரிகள் கலந்து கொள்ள வேண்டும். மேலும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை  மாவட்ட வன அலுவலர் தலைமையில் கூட்டம் நடத்த வேண்டும். வன விலங்கு களால் ஏற்படும் பாதிப்புக்கு இழப்பீடு  தொகையை உடனடியாக வழங்க வேண்டும். இன்றைய சந்தை மதிப்புக்கு  ஏற்றவாறு இழப்பீட்டு தொகையை நிர் ணயம் செய்ய வேண்டும். வனப்பகுதி யில் விலங்குகளுக்கு தண்ணீர் மற்றும்  உணவுகள் கிடைக்கும் வகையில் தடுப் பணைகள் கட்டவும், பழங்களை தரும்  மரங்களை நடவு செய்ய வேண்டும். வன  அடிவாரப் பகுதியில் சூரிய மின் வேலி  அமைக்க வேண்டும். காட்டு யானைகள்  விளை நிலங்களுக்கு வருவதை தடுக் கும் வகையில் பெரிய அளவிலான அக ழிகளை வன அடிவாரப் பகுதியில்  வெட்ட வேண்டும் என்று கோரிக்கை  வைத்தனர்.