tamilnadu

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

நிதி நிறுவனத்தின் நெருக்கடியால் தற்கொலை முயற்சி

சேலம், ஜூலை 22- தனியார் நிறுவனத்தின் நெருக்கடியால், இளம்பெண் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் திங்களன்று குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில், சங்ககிரி அருகே உள்ள ஏகாபுரம், ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்த தியா கராஜன் என்பவரின் மனைவி சுமதி (27), தனது  5 வயது மகளுடன் மனு அளிக்க வந்தார்.  ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் பகு திக்கு வந்தவுடன், திடீரென கேனில் வைத்தி ருந்த பெட்ரோலை எடுத்து தலையில் ஊற்றிக் கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதைக் கண்ட அங்கிருந்த போலீசார், அவரை மீட்டு  விசாரணை மேற்கொண்டனர்.  போலீசாரின் விசாரணையில், தனியார் நிதி நிறுவனத்தி டம் தறிக்கூடம் அமைக்க ரூ.2.50 லட்சம் கடன்  வாங்கி இருந்தோம். அதில், ரூ.1 லட்சத்தை அடைத்துவிட்டோம். தற்போது நிதி நிறுவன ஊழியர்கள், மீதம் உள்ள பணத்தை கேட்டு  கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். நிதி நிறுவனத்தினரின் நெருக்கடி தாங்காமல்,  தற்கொலை முயற்சியில் ஈடுபட்டேன் என  கண்ணீருடன் கதறியுள்ளார். இதன்பின் சும தியை சேலம் நகர காவல் நிலையத்திற்கு  அழைத்துச் சென்று, விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

பழங்குடியினர் பெயரில் மோசடி

தருமபுரி, ஜூலை 22- இருளர் இன மக்களை ஏமாற்றி, தாட்கோ  கடன் மானியத்தில் டிராக்டர் வாங்கி மோசடி  செய்துள்ளதாகக்கூறி பாதிக்கப்பட்டோர் தரு மபுரி ஆட்சியரிடம் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட் டம், வட்டவணஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட மலை கிராமமான ஏரிமலையில் சுமார் 70  குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இருளர்  பழங்குடியின மக்களான இவர்களுக்கு, தாட்கோ வங்கி கடன் வசதி மூலம் டிராக்டர்  வாங்க அரசு சலுகை அளித்துள்ளது. இது பற்றி அறியாத மலைவாழ் மக்களை சில மோசடி பேர்வழிகள் ஏமாற்றி வங்கிக்கடன் படிவங்களில் கையெழுத்து வாங்கி, சில  ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு அவர்க ளுக்கே தெரியாமல் மானியம் மற்றும் தாட்கோ கடன் மூலம், அவர்கள் பெயரில்  டிராக்டரை வாங்கி வேறு நபர்களுக்கு  விற்றுவிட்டு மோசடி செய்துள்ளனர். வட்டா ரப் போக்குவரத்து அலுவலகத்திலிருந்து ஆர்சி புத்தகம் மற்றும் ஆவணங்கள் சம் பந்தப்பட்ட பழங்குடி மக்களுக்கு தபால்  மூலம் அனுப்பப்படுகிறது. அவர்களிடம் சென்று நைசாக பேசி ஆர்.சி புத்தகத்தை யும் பெற்றுக் கொண்டு சுமார் 25 பேரை  மோசடி செய்துள்ளனர். எனவே, இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என  வலியுறுத்தி ஏரிமலை கிராமத்தைச் சேர்ந்த  மலைவாழ் மக்கள் கையில் ஆர்.சி புத்தகத் துடன் செவ்வாயன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பொறுப்பேற்பு

நாமக்கல், ஜூலை 22- நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக எஸ்.விமலா பொறுப்பேற்றுக் கொண்டார். நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணி யாற்றிவந்த ச.ராஜேஷ்கண்ணன், பணியிட மாற்றம் செய்யப் பட்டார். தொடர்ந்து, சென்னை ஊழல் தடுப்புப்பிரிவில் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த எஸ்.விமலா, நாமக்கல் மாவட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட்டார். அவர் திங்களன்று பொறுப்பேற்றுக் கொண்டார். திண்டுக்கல், வேட சந்தூரைச் சேர்ந்த இவர், திருவாரூர் மாவட்டத்தில் காவல் துணைக் கண்காணிப்பாளராகவும், சென்னையில் நுண் ணறிவுப் பிரிவு கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள் ளார்.