tamilnadu

img

கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

கரும்பு வெட்டும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், ஜூலை 5- அடையாள அட்டை வழங்க வேண்டும், என வலியுறுத்தி கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்கத்தினர் சனியன்று ஆர்ப் ்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீருக்கு வரி விதிக் கப்படுவதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். நாமக்கல், பொன்னி சர்க்கரை ஆலை நிர்வாகம், கரும்பு வெட்டும் தொழி லாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். ஒன்றிய அரசு ஒருங்கிணைந்த பாதுகாப்புச் சட்டத்தை கொண்டு வர வேண்டும், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு கரும்பு வெட்டும் தொழிலாளர் சங்கத்தின் பொன்னி சர்க்கரை ஆலை பகுதிக்குழு சார்பில் சனியன்று  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பள்ளிபாளையம், தட்டாங் குட்டை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்.குரு சாமி தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.துரைசாமி கண்டனவுரையாற்றினார். இதில் கரும்பு வெட் டும் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.