tamilnadu

img

தீக்கதிர் நாளிதழுக்கான சந்தா ஒப்படைப்பு

தீக்கதிர் நாளிதழுக்கான சந்தா ஒப்படைப்பு

கோவை, ஜூலை 20- கோவையில் பல்வேறு பகுதிகளில், தீக்கதிர் சந்தா ஒப்படைப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தமிழ்நாடு முழுவதும் தீக் கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம் நடைபெற்று வருகிறது. அதன்ஒருபகுதியாக மார்க் சிஸ்ட் கட்சியின் கோவை  மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியக்குழு சார்பில் தீக்கதிர் சந்தா ஒப் படைப்பு நிகழ்ச்சி சனியன்று,  கட்சி அலுவலகத்தில், பேரூ ராட்சி மன்ற உறுப்பினர் ந. சிவராஜ் தலைமையில் நடை பெற்றது. கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும், தீக்கதிர்  கோவை பதிப்பு பொறுப்பா ளருமான கே.காமராஜிடம் 63  சந்தாக்கள் ஒப்படைக்கப் பட்டன. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.அஜய்குமார் கே.எஸ்.கனகராஜ், ஒன்றியச் செய லாளர் எம்.கோகுல கிருஷ்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் ந.ராஜா உட்பட  பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று மேட்டுப் பாளையம் தாலுகாக்குழு சார்பில், சிடிசி கட்சி அலுவ லகத்தில் நடைபெற்ற நிகழ்ச் சியில் கே.காமராஜிடம் 9  புதிய சந்தாக்கள் மற்றும்  புதுப்பிக்கப்பட்ட சந்தாக்க ளுக்கான தொகை வழங்கப் பட்டது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. அஜய்குமார், கே.எஸ்.கன கராஜ், தாலுகா செயலா ளர் கே.கனகராஜ், மாவட்டக் குழு உறுப்பினர் ராஜலட்சுமி ஆகியோர் பங்கேற்றனர். பொள்ளாச்சி தாலுகாக் குழு சார்பில் சேர்க்கப்பட்ட  16 தீக்கதிர் சந்தாக்களுக் கான தொகை கே.காமராஜி டம் ஒப்படைக்கப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு  உறுப்பினர் வி.ஆர்.பழனிச் சாமி, தாலுகா செயலாளர் மூ.அன்பரசன், விரைவு போக்குவரத்து ஊழி யர் சங்க மாநில துணைப் பொதுச்செயலா ளர் கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்ட னர். அன்னூர் தாலுகாவில் 17 தீக்கதிர்  சந்தாக்கள் கே.காமராஜிடம் ஒப்படைக்கப் பட்டது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் அஜய்குமார், கே.எஸ்.கனகராஜ், தாலுகா செயலாளர் மணிகண்டன் ஆகியோர்  கலந்து கொண்டனர். மதுக்கரை ஒன்றியக் குழு சார்பில் 19 தீக்கதிர் சந்தாக்கள் கே. காமராஜிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.ஆர்.பழ னிச்சாமி, ஒன்றியச் செயலாளர் எம்.பஞ்ச லிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகரப்பகுதிகளில் ஞாயிறன்று தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கம், சிபிஎம் நகரச் செய லாளர் கந்தசாமி தலைமையில் நடைபெற் றது. இதில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பி னர் பி.டில்லிபாபு, மாவட்ட செயற்குழு உறுப் பினர் எம்.ஆர்.முருகேசன், மாவட்டக்குழு உறுப்பினர் என்.சக்திவேல் உட்பட பலர் கலந்து கொண்னடர்.