tamilnadu

img

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உருவப்படத்தை எரித்து மாணவர்கள் போராட்டம்

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உருவப்படத்தை எரித்து மாணவர்கள் போராட்டம்

திருப்பூர், அக்.8- பாலஸ்தீன குழந்தைகள், பெண்கள்  உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோரை கொன்று குவிக்கும் இஸ்ரேல் பிரதமர்  நெதன்யாகு உருவப்படத்தை எரித்து  திருப்பூரில் மாணவர்கள் செவ்வா யன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில்  ஈடு பட்டனர். அமெரிக்கா ஏகாதிபத்தியத்தின்  துணையோடு இஸ்ரேல் பாலஸ்தீனத் தில் இனப் படுகொலையை நடத்தி வரு கிறது. இதை எதிர்த்தும், போர் நிறுத்தம்  கோரியும் இந்திய மாணவர் சங்க திருப் பூர் மாவட்டக்குழு சார்பில் ஜெய்வா பாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு இருந்து திருப்பூர் குமரன் நினை வகம் வரை பேரணியாக வந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர் சங்க மாவட்டத் தலைவர் விமல்ராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செய லாளர் மணிகண்டன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். வாலிபர் சங்க மாவட் டத் துணைச் செயலாளர் பிரவீன்கு மார் வாழ்த்தி பேசினார். இதில் இஸ்ரேல்  பிரதமர் நெதன்யாகு உருவப்படத்தை எரித்து மாணவர்கள் தங்கள் எதிர்ப்பை  பதிவு செய்தனர்.  மாணவர் சங்க நிர்வாகிகள் சுஜிதா,  புனிதன், காதர், செயற்குழு உறுப்பினர்  கண்ணன் உள்பட 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று கண் டன முழக்கங்கள் எழுப்பினர்.