போலீசாரின் கண்ணை உறுத்தும் மாணவர் சங்க கொடி
திருப்பூர், ஆக.23- மாணவர் சங்க மாநில மாநாட்டையொட்டி, முறையாக அனுமதி பெற்று திருப்பூரில் கட்டப்பட்ட கொடிகளை போலீ சார் அவிழ்த்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டதைய டுத்து, மீண்டும் கொடிகள் கட்ட அனுமதித்தனர். இந்திய மாணவர் சங்கத்தின் 27 ஆவது தமிழ்நாடு மாநில மாநாடு வெள்ளியன்று திருப்பூரில் தொடங்கியது. முதல் நாள் நிகழ்வாக பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடை பெற்றது. இந்நிலையில், பிரதிநிதிகள் மாநாடு சனி மற்றும் ஞாயிறன்று திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்று வருகி றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து இந்திய மாணவர் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண் டுள்ளனர். மாநில மாநாட்டை முன்னிட்டு திருப்பூரில் பல் வேறு பகுதிகளிலும் இந்திய மாணவர் சங்கத்தின் கொடி கள் கட்டப்பட்டுள்ளன. திருப்பூர் வளர்மதி அருகே நொய் யல் பாலத்தில் கட்டப்பட்ட இந்திய மாணவர் சங்கத்தின் கொடிகள் வெள்ளியன்று இரவு போலீசார் அகற்றியுள்ள னர். இதனையறிந்த, மாணவர் சங்க மாநாட்டு வரவேற்பு குழு நிர்வாகிகள் டி.ஜெயபால், பி.பாலன், மணிகண்டன், ஜி.சம்பத், ஆர்.காளியப்பன் உள்ளிட்டோர் கையில் கொடி களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொ டர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் மாநகர உதவி ஆணையர் உள்ளிட்ட போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி னர். அப்போது, முறையாக அனுமதி பெற்று, யாருக்கும் எந்த விதமான இடையூறு இல்லாத வகையில் கொடிகள் கட்டப்பட்டிருந்தன. அப்போதும் எங்களுக்கு எந்தவித தக வல்களும் தெரிவிக்காமல் கொடிகள் அகற்றப்பட்டுள்ளது. மேலும், அகற்றப்பட்ட கொடிகள் சாலையோரத்தில் வீசிச் சென்றுள்ளனர் என ஆவேசமாக கேள்வி எழுப்பினர். பின் னர், சமாதானப்படுத்திய அதிகாரிகள், மீண்டும் கொடிகள் கட்ட அனுமதி அளித்தனர். மீண்டும் வளர்மதி நொய் யல் ஆற்றின் பாலத்தில் கொடிகள் கட்டிய பின்னரே அனைவரும் அவ்விடத்தில் இருந்து அகன்றனர்.