மக்களை சுற்றிவளைக்கும் தெருநாய்கள்
சேலம், ஆக.30- மேச்சேரி அருகே பொதுமக்களை சுற்றி வளைத்து அச்சுறுத்தும் தெருநாய்களை பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சேலம் மாவட்டம், மேச்சேரி பத்திரகாளி அம்மன் கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் மிகப்பிரசித்தி பெற்ற தாக உள்ளது. கோவில் பகுதிகள் மற்றும் கடைத்தெரு பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் தெருநாய்கள் உலா வருகின்றன. பொதுமக்களை சுற்றி வளைத்து தெருநாய் கள் அச்சுறுத்தி வருவதால், வெளியே நடமாட பொது மக்கள் அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
