tamilnadu

img

எஸ்எஸ்ஐ கொலை விவகாரம்: இருவர் சரண்

எஸ்எஸ்ஐ கொலை விவகாரம்: இருவர் சரண்

உடுமலை, ஆக.6– உடுமலை சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கொலை யில் தொடர்புடைய மூன்று  பேரில் இருவர் சரணடைந் துள்ளனர். உடுமலை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மகேந் திரன் தோட்டத்தில் தங்கி  பணியாற்றி வந்த குடும்பத் தினருக்குள் சண்டை நடை பெறும் தகவலை அறிந்து ரோந்து மணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு உதவி  காவல் ஆய்வாளர் சண்முகவேல் உள்ளிட்ட காவல்துறையினர் சென்றனர். சமாதானம் செய்யச்சென்ற சண்முகவேலை, வெட்டிய தால் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த  கொலை வழக்கில் தேடப்பட்ட மூன்று பேரில் மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கபாண்டி யன் ஆகிய இருவரும் திருப்பூர் மாவட்ட காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் புத னன்று சரணடைந்தனர். மேலும் மணிகண் டன் என்பவரை தேடி வருகிறார்கள். இந்நிலையில் உடுமலை இந்திராநகரில் இருக்கும் சண்முகவேலின் வீட்டிற்கு வந்த  தமிழ்நாடு காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட காவல்துறை உயர் அதி காரிகள் சண்முகவேல் உடலுக்கு அஞ்சலி  செலுத்தினர். மேலும், தமிழக முதல்வர்  அறிவித்த ஒரு கோடி ரூபாய்க்கான காசோ லையை அவர்கள் வழங்கினர். பின்னர் காவல்துறையின் முழு மரியாதையுடன் உடுமலை மின்மயானத்தில் சண்முகவேல் உடல் தகனம் செய்யப்பட்டது.