tamilnadu

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

 திருப்பூர், ஆக.27: திருப்பூர் மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடை பெற உள்ளது. 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 மற்றும் 17ஆம் தேதி  பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் பிறந்த நாளை  முன்னிட்டு பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக் கான பேச்சுப்போட்டி நடத்தப்பட உள்ளது. இது தொடர் பாக தமிழ் வளர்ச்சி துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது, பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு வரும் செப்டம் பர் மாதம் 3 மற்றும் 4 ஆம் தேதி திருப்பூர் பல்லடம் சாலை  எல்ஆர்ஜி மகளிர் கலைக் கல்லூரியில் பேச்சுப் போட்டிகள்  நடைபெற உள்ளது.  பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பேச்சுப்  போட்டிக்கான தலைப்புகளாக அண்ணாவின் அடுக்கு  மொழிகள், ஆளுமை நாயகன் அண்ணா, பேரறிஞர் அண்ணா வின் பெருமைகள் என பள்ளி மாணவர்களுக்கும்,  கல்லூரி  மாணவர்களுக்கு நாடகத்துறையில் அண்ணா, அண்ணா வின் தமிழ் தொண்டு, அண்ணாவின் படைப்புலகம் என தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல் பள்ளி மாணவர்களுக்கு தந்தை பெரியார்  பிறந்த நாளை ஒட்டி நடத்தப்பட உள்ள பேச்சுப் போட்டிக் கான தலைப்புகளாக சீர்திருத்த சிந்தனையாளர் பெரியார்,  பெரியார் எனும் பேராற்றல்,  பெரியாரின் பகுத்தறிவு பார்வை  என்னும் தலைப்புகளும்,  கல்லூரி மாணவர்களுக்கு பெரியா ரின் பெண்ணிய சிந்தனைகள், பெரியாரும் சுயமரியாதை இயக்கமும், பெரியாரின் சமூக சீர்திருத்தங்கள் என்னும் தலைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. பள்ளி தலைமை ஆசிரி யர்கள் பள்ளிகளில் மாணவர்களுக்கு முதல் சுற்று போட்டி களை நடத்தி மாவட்ட அளவிலான போட்டிக்கு பங்கேற்க  செய்ய வேண்டும். கல்லூரி மாணவர்கள் பங்கேற்க வரும்  மாணவர்கள் பட்டியலை முதல்வர் வாயிலாக திருப்பூர் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குனர் அலுவ லகத்தில் நேரிலோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ வரும்  செப்.1 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என தெரிவிக் கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் பள்ளி, கல்லூரி மாண வர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம்,   இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம்,  மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம்  வழங்கப்பட உள்ளது. பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்  போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தேர்வு  செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசு தொகை ரூ.2  ஆயிரம் விதம் வழங்கப்பட உள்ளது. பள்ளி மாணவர்க ளுக்கு காலை 10 மணிக்கு கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகல்  2 மணிக்கு போட்டிகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.