tamilnadu

img

பெண்கள் மீதான வன்முறையைத் தடுத்திட  சட்டமன்றத்தில் சிறப்பு அமர்வு – மாதர் சங்கம்

பெண்கள் மீதான வன்முறையைத் தடுத்திட சட்டமன்றத்தில் சிறப்பு அமர்வு – மாதர் சங்கம்

கோவை, ஆக.12- பெண்கள் மற்றும் குழந்தைக ளுக்கு எதிரான குற்றங்களை தடுத் திட, சட்டமன்றத்தில் சிறப்பு அமர்வு  நடத்திட வேண்டும் என அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்ட மாநாடு தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கோவை மாவட்ட  17 ஆவது மாநாடு திங்களன்று எழுச் சியுடன் தொடங்கியது. இதன் ஒரு  பகுதியாக, சத்தி சாலையில் உள்ள  சரவணம்பட்டி பெட்ரோல் பங்க் முதல் காளப்பட்டி பிரிவு சிக்னல் வரை ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற பேரணி நடை பெற்றது. இதைத் தொடர்ந்து நடந்த  பொதுக்கூட்டத்திற்கு மாநிலக் குழு  உறுப்பினர் ராஜலட்சுமி தலைமை வகித்தார். மாவட்டப் பொருளாளர் ஜெ. உஷா வரவேற்றார். இதில், மாதர் சங்க அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி, அகில இந்திய துணைச் செயலா ளர் பி. சுகந்தி, மாநிலப் பொதுச்  செயலாளர் ஏ.ராதிகா உள்ளிட் டோர் உரையாற்றினர். இதனைத்தொடர்ந்து, இரண் டாம் நாள் செவ்வாயன்று சரவணம் பட்டி விளாங்குறிச்சி சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத் தில் நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினர் ராஜலட்சுமி தலைமை வகித்தார். வரவேற்புக் குழுத் தலைவர் கல்யாணி வரவேற் றார். இதில், மாதர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் ஏ. ராதிகா துவக்கவுரையாற்றினார். மாவட் டச் செயலாளர் டிசுதா, பொருளா ளர் ஜெ. உஷா ஆகியோர் அறிக்கை களை முன்மொழிந்தனர். மாநாட்டை வாழ்த்தி மாநில  செயற்குழு உறுப்பினர் பவித்ரா  தேவி, சிஐடியு மாவட்டச் செயலா ளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, வாலிபர்  சங்க மாவட்டச் செயலாளர் கே.  அர்ஜுன், மாணவர் சங்க மாவட்டச்  செயலாளர் ஜூல்ஃபிகர் ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினர். இதில், பெண்கள் மற்றும்  குழந்தைகள் மீதான வன்முறை யைத் தடுத்து நிறுத்த சட்டமன்றத் தில் சிறப்பு அமர்வு நடத்த வேண் டும். வரதட்சணைக் கொடுமைக ளுக்கு எதிராகவும், திருமண சீர் வரிசை விளம்பரங்களை துணிக் கடை, நகைக் கடை, பாத்திரக் கடை களில் தடை செய்ய வேண்டும். ஈஷா யோக மையத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்க சிறப் புச் சட்டம் இயற்ற வேண்டும். 100  நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை  நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதி களுக்கு விரிவுபடுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாநாட்டில், தலைவராக ஜெ. உஷா, செயலாளராக டி. சுதா, பொருளாளராக கே. தங்கமணி, துணைத் தலைவர்களாக எஸ்.ராஜ லட்சுமி, எஸ். சாமுண்டீஸ்வரி எம். அமுதா, துணைச் செயலாளர்க ளாக கே. ஜீவாமணி, என். ரேவதி,  என்.புஷ்பலதா உள்ளிட்ட 27 பேர்  கொண்ட மாவட்டக் குழு உறுப்பி னர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அகில இந்திய துணைச் செயலா ளர் பி. சுகந்தி நிறைவுரையாற்றி னார். எஸ்.எஸ். குளம் கமிட்டி பொருளாளர் என். சுமதி நன்றி கூறி னார்.