tamilnadu

திருப்பூரில் ஆக.4 இல் மகளிர் சிறப்பு பொது குறைகேட்புக்கூட்டம்

திருப்பூரில் ஆக.4 இல் மகளிர் சிறப்பு பொது குறைகேட்புக்கூட்டம்

திருப்பூர், ஜூலை 30 - சேலம், ஈரோடு, திருப்பூர் மாவட்ட பெண்களுக்கு எதி ரான குற்ற வழக்குகள் சம்பந்தமாக ஆகஸ்ட் 4 அன்று  பெண்கள் சிறப்பு பொது குறைகேட்பு நிகழ்வு திருப்பூ ரில் நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருப் பூர், ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்தில் உள்ள பெண்க ளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள் சம் பந்தமாக தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலை வரின் தலைமையில் பெண்களுக்கான சிறப்பு பொது குறைகேட்பு நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் திருப்பூர், ஈரோடு, மற்றும் சேலம்  மாவட்டங்களில் நிலுவையில் உள்ள புகார் மனுக்கள் மற்றும் நேரில் பெறப்படும் புகார் மனுக்கள் விசாரிக் கப்படுகிறது. ஆகஸ்ட் 4ஆம் தேதியன்று காலை 9.30  மணி முதல் திருப்பூரில் உள்ள ஆர்.கே.ரெசிடென்ஸி, 391, காந்திநகர், அவிநாசி சாலை, திருப்பூரில் நடை பெற உள்ளது. இந்நிகழ்வில் பெண்கள் கலந்து கொண்டு தங்களுக்கு உள்ள பிரச்சனைகள் குறித்து புகார் மனுக் கள் அளித்து பயன் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள் ளது.