tamilnadu

img

சிறப்பு பணிப்பாதுகாப்பு சட்டத்தை உடனே இயற்ற வேண்டும்

சிறப்பு பணிப்பாதுகாப்பு சட்டத்தை  உடனே இயற்ற வேண்டும்

ராணிப்பேட்டை, ஆக.30- சிறப்பு பணிப்பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசு உடனே இயற்ற வேண்டும் உள்ளிட்ட 7 கோரிக்கை வலியுறுத்தி சனிக்கிழமையன்று (ஆக.30) வருவாய் துறை சங்கங்களின் கூட்டமைப்பு முதல் மாவட்ட கோரிக்கை மாநாடு நடைபெற்றது. வருவாய் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் ஜெ.கே. விஜயசேகர் தலைமையில் வாலாஜாவில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கிராம நிர்வாக அலு வலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பா. சிவக்குமார் வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில பொருளாளர் வி. தியாகராஜன் துவக்கி வைத்து பேசினார். வருவாய் துறை சங்க முன்னாள் மாவட்ட பொறுப்பாளர்கள் குப்பன், பாபு  வாழ்த்தி பேசினர். நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சங்க மாநில தலைவர் ஜெ. ராஜா, மாவட்ட தலைவர் எம். ஆனந்தன், துணை தலைவர் சி. ஹரிகிருஷ்ணன், வருவாய் துறை சங்க மாவட்ட செயலாளர் செல்வ குமார், பொருளாளர் கன்னியப்பன், கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் சிவகுமார், கிராம உதவியாளர்கள் சங்கம் மாவட்ட துணைத் தலைவர் சிவகுமார், வாலாஜா வட்டம் தலைவர் ராஜா, சோளிங்கர் வட்ட தலைவர் பரந்தாமன், நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் மாவட்ட தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் தொடர்பாக பேசினர். இறுதியாக கிராம நிர்வாக அலு வலர் சங்க மாவட்ட செயலாளர் மு. சக்கர வர்த்தி நன்றி கூறினார். கோரிக்கைகள் அனைத்து நிலையிலான காலிப்பணி யிடங்கள் நிரந்தர அடிப்படையில் நிரப்ப வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனத்திற்கு உச்ச வரம்பு 5% என குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து ஏற்கெனவே இருப்பதைப் போன்று 25% ஆக நிர்ணயம் செய்திட வேண்டும். கிராம உதவியாளர்களின் வாரிசு களுக்கு கல்வி தகுதியின் அடிப்படையில் பணியிடம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 7 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.