tamilnadu

img

வரதட்சனை கொடுமைக்கு எதிராக தனிச்சட்டம்

வரதட்சனை கொடுமைக்கு எதிராக தனிச்சட்டம்

மாதர் சங்க சேலம் மாநாட்டில் தீர்மானம்

சேலம், ஆக.17- தொடரும் வரதட்சனை கொடு மைக்கு எதிராக தனிச்சட்டம் இயக்க வேண்டும் என வலியுறுத்தி,  மாதர் சங்க சேலம் மாவட்ட மாநாட் டில் தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சேலம் மாவட்ட  17 ஆவது மாநாடு, பெத்தநாயக்கன் பாளையத்தில் தோழர்கள் கே.பி.ஜானகி அம்மாள், பிருந்தா ஆகி யோரது நினைவரங்கத்தில் ஆக. 16,17 ஆகிய தேதிகளில் நடைபெற் றது. சங்கத்தின் கொடியை மாவட்ட  துணைத்தலைவர் கே.ராஜாத்தி ஏற்றி வைத்தார். மாவட்டத் தலை வர் ஆர்.வைரமணி தலைமையில் நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட் டில், துணைச்செயலாளர் ஜி. கவிதா வரவேற்றார். அகில இந்திய  துணைத்தலைவர் பி.சுகந்தி, மாநாட்டை துவக்கி வைத்து உரை யாற்றினார். மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.தேவி, பொருளாளர் கே. பெருமா ஆகியோர் அறிக்கை களை முன்வைத்தனர். சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஆர்.சசிகலா மற்றும் சகோதர சங்கங்களின் தலைவர்கள் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலி யல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சட்டம் இயற்ற வேண்டும்.  விலைவாசி உயர்வை கட்டுப்ப டுத்த வேண்டும். வேலையின் மையை போக்க அரசு உடனடி நட வடிக்கை எடுக்க வேண்டும். 100  நாள் வேலை திட்டத்தில் விண்ணப் பித்த அனைவருக்கும் வேலை வழங்கி, கூலி உயர்வு ஏற்படுத்த  வேண்டும். நுண் நிதி நிறுவனங்களி டமிருந்து மக்களை பாதுகாத்து, பொதுத்துறை நிறுவனங்கள் மூலம்  குறைந்த வட்டிக்கு பணம் வழங்க  வேண்டும். வீட்டுமனை இல்லாத வர்களுக்கு வீட்டுமனை மற்றும் வீடு  கட்டித்தர வேண்டும். வரதட்சணை  கொடுமைக்கு எதிராக தனிச்சட்டம் இயற்ற வேண்டும். ரீ கிரியேட்டர் ஃபியூச்சர் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மூலம் பொதுமக்கள் மற்றும் பெண்கள் பெரிய இழப்பை சந்தித்துள்ளனர். ரூ.1500 கோடிக்கு மேல் ஏமாற்றப் பட்டுள்ள நிலையில், பொதுமக்க ளின் பணத்தை மீட்டு சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், உள் ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின்  சேலம் மாவட்டத் தலைவராக  ஆர்.வைரமணி, செயலாளராக  எஸ்.எம்.தேவி, பொருளாளராக  கே.பெருமா, துணைத்தலைவர்க ளாக ஐ.ஞானசௌந்தரி, சகுந்தலா, துணைச்செயலாளர்களாக செல்வி, ஜி.கவிதா உட்பட 15 பேர் மாவட்டக்குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். சங்கத் தின் மாநிலச் செயலாளர் ஜி.ராணி  நிறைவுயாற்றினார். தாலுகா செய லாளர் கே.மேதினம் நன்றி கூறி னார்.