tamilnadu

img

ஸ்மார்ட் மீட்டர்  திட்டத்தை கைவிட வேண்டும் 

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும்

சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு ஆர்ப்பாட்டம்

சேலம், ஜுலை 30 - மின் கட்டணத்தை அதிகரித்து, மின் நுகர்வோருக்கு சுமையை ஏற் படுத்தும், ஸ்மார்ட் மீட்டர் ஒப்பந் தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் தமிழ்நாடு முழு வதும் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை உட னடியாக கைவிட வேண்டும். ஒன் றிய மோடி அரசின் நிர்பந்தத்திற்கு  தமிழ்நாடு அரசு பணியக் கூடாது.  ஸ்மாட் மீட்டர் வைக்க தனியாரிடம் ஒப்பந்தம் கோருவதை உடனடி யாக நிறுத்த வேண்டும், மின் வாரியத்தில் உள்ள காலிப்பணி யிடங்கள் அனைத்தையும் நிரப்ப  வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சேலம் கிளை சார்பில் உடை யாபட்டி பகுதியில், மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு,  தலைவர் குமார் தலைமை ஏற்றார்.  சேலம் மின் பகிர்மான வட்டக்கிளை  செயலாளர் வி. ரகுபதி பேசினார். இதில் சேலம் பொது கட்டுமான வட்ட நிர்வாகிகள் மற்றும் சேலம் மின் திட்ட கிளை நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர். கோவை கோவை டாடாபாத் தலைமை  பொறியாளர் அலுவலகம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, மாநகர் கிளை தலைவர் ஆர். காளிமுத்து தலைமை வகித் தார். மின்ஊழியர் மத்திய  அமைப்பு மாநிலச் செயலாளர்  டி.மணிகண்டன், மண்டலச் செய லாளர் டி.கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். இதில், திரளா னோர் கலந்து கொண்டனர். முடி வில், மாநில செயற்குழு உறுப்பி னர் டி.பழனிசாமி நன்றி கூறினார். தருமபுரி தருமபுரி மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் முன்பு, சிஐ டியு மின் ஊழியர் மத்திய அமைப் பின் மாவட்ட துணைத்தலைவர் எஸ்.விஜயன் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில துணைத்தலைவர் பி.ஜீவா,  மாவட்டச் செயலாளர் தீ.லெனின் மகேந்திரன், பொருளாளர் திம்மரா யன் உட்பட பலர் கலந்து கொண்ட னர். நாமக்கல் நாமக்கல் மாவட்டம், பள்ளி பாளையம், ஒட்டமெத்தை ரவுண் டானா பகுதியில் மக்கள் சந்திப்பு இயக்க நிகழ்ச்சி நடைபெற்றது. சங்கத்தின் கோட்டத் தலைவர்  கனகராஜ் தலைமை வகித்தார். சிஐ டியு மாவட்ட உதவித்தலைவர் முத் துக்குமார் வாழ்த்திப் பேசினார். இதில் மின் ஊழியர் சங்க கோட்டச் செயலாளர் பழனிவேல், திட்டத் தலைவர் ஏ.செல்வக்குமார், ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் நிர்வாகி  ஆறுமுகம் உட்பட திரளானோர் பங் கேற்றனர்.