கொண்டத்து காளியம்மனை கைவிட்ட செங்கோட்டையன்
கோவை, செப்.8- மனம் சரியில்லாத தால் ஹரிதுவார் சென்று ராமரை தரிச னம் செய்யப் போவ தாக, தனது டெல்லி பயணம் குறித்து அதி முக முன்னாள் அமைச் சர் ஏ.கே.செங்கோட் டையன் தெரிவித்துள் ளார். இதற்கு நெட்டி சன்கள் பலரும் கிண் டலடித்து வருகின்ற னர். அதிமுகவை வலுப்படுத்த கட்சியை ஒன்றிணைக்க வேண்டும் என முன்னாள் அதிமுக அமைச்சர் ஏ.கே. செங்கோட்டையன் தெரிவித்து, எடப்பாடி பழனிச்சாமி 10 நாட்கள் கெடு விதித்தார். இந்நிலையில் அவரது கட்சி பொறுப்புகளை எடப்பாடி பழனிச்சாமி பறித்தார். இந்நிலையில், 9 ஆம் தேதி மீண்டும் செய்தியாளர்களை சந்திக்க உள்ளதாக ஏ.கே. செங்கோட்டையன் தெரி வித்த நிலையில், கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார். முன்னதாக அவர் பாஜக தலை வர்களை சந்திக்கிறாரா? என்ற கேள்வி எழுந்த நிலை யில், கோவை விமான நிலையத்தில் பேட்டியளித்த அவர், மன நிம்மதிக்காக ஹரித்துவர் ராமர் கோவி லுக்கு செல்கின்றேன். பாஜக தலைவர்கள் யாரையும் சந்திக்கவில்லை என்றார். இதற்கு நெட்டிசன்கள் பலரும் கலாய்த்து வரு கின்றனர். இதுகுறித்து எழுத்தாளர் ஒடியன் லட்சுமணன னின் தனது முகநூல் பதிவு வைரலாகி வரு கிறது. இதில் அவர், கோபிசெட்டி என்பவர் வீரபாண்டி யில் பெரும் வள்ளலாகத் திகழ்ந்ததார் கொடுத்துக் கொடுத்து தன்னிடமிருந்த எல்லாவற்றையும் இழந்து விட்டார் அப்போது ஒருவர் தானம் கேட்டு வீட்டுக்கு வரு கிறார் வீட்டுக்குள் சென்று பார்க்கிறார் கோபி .ஒரு துரும்புகூட இல்லை. வறியோருக்குக் கொடுக்கத் தன் னிடம் ஏதுமில்லையே என்று வருந்திய கோபி பாரியூர் கொண்டத்து காளியம்மனிடம் முறையிட்டு புலிப துங்கி வாழும் ஒரு புதருக்குள் சென்று உயிர்விடத் துணிந்தார் அந்த நேரத்தில் அந்த புதருக்குள் மறைந்து தாங் கள் களவாடிய பொருட்களை பங்குபோட்டுக் கொண்டி ருந்த திருடர் கூட்டம் புலி என்றெண்ணி அப்பொருட் களை அங்கேயே விட்டு விட்டு ஓடியது. அந்த பொருட் களை எடுத்து ஏழைகளுக்கு கொடுத்தார் கோபி செட்டி. அவர் பெயரால்தான் வீரபாண்டி என்னும் அந்த ஊர் கோபிசெட்டிபாளையம் ஆனது என்கிறது ஒரு வாய்வழி வரலாறு இவ்வளவு சக்திவாய்ந்த கொண்டத்துகாளியம் மனை விட்டுவிட்டு ஹரித்துவாரில் இருக்கும் ராமனை பார்க்க கிளம்பியிருக்கிறார் செங்ஸ். கொண்டத்து காளியம்மா உன் கோபம் என்னெனவென்று காட்டு என கலாய்த்து பதிவிட்டிருக்கிறார்.