வெளி முகமை மூலம் ஊழியர் எடுப்பதை கைவிடக்கோரி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தருமபுரி, செப்.18- மகளிர் திட்டப் பணியாளர்களை ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என வலியு றுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையிலுள்ள தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் அலு வலகத்தில், 11 பிற துறை அலுவ லர்கள் பணிபுரிவதை ரத்து செய்து, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் களை நியமனம் செய்ய வேண்டும். மாவட்ட மகளிர் திட்ட அலுவலகங்க ளில் ஒரு உதவி திட்ட அலுவலர் - 2 பணியிடத்தை வெளிமுகமை மூல மாக நிரப்பப்படுவதை கைவிட்டு, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் களை நியமனம் செய்ய வேண்டும். தமிழ்நாடு கிராமப்புற மாற்றம் திட் டத்திற்கு நியமிக்கப்படும் உதவி திட்ட அலுவலர் பணியிடங்களை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் களை கொண்டு நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கத்தினர் வியாழ னன்று தருமபுரி மாவட்டத்தில் பல் வேறு இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டங்களில், சங்கத் தின் மாநில துணைத்தலைவர் ச. இளங்குமரன், மாநில செயற்குழு உறுப்பினர் பி.பிரின்ஸ், மாவட்டத் தலைவர் முகமது இலியாஸ், மாவட் டச் செயலாளர் வெ.தருமன், மாவட் டப் பொருளாளர் வினோத்குமார் அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலை வர் எம்.சுருளிநாதன் உள்ளிட்ட நிர் வாகிகள் பங்கேற்றனர்.
