‘எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கம்’ எனக் கூறி அரசுப் பணி வாங்கி தருவதாக ரூ.34 லட்சம் மோசடி
சேலம், ஜூலை 3- முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் இளங்கோவன் ஆகியோ ருக்கு நெருக்கமானவர் என்று, கூறி அரசு வேலை வாங்கித்தருவதாகச் சொல்லி ரூ.34 லட்சம் மோசடி செய்தவர் மீது காவல் ஆணையர் அலுவலகத் தில் புகாரளிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் பேரூ ராட்சி, 4 ஆவது வார்டு பகுதியைச் சேர்த் தவர் ரமேஷ். இவர், அதிமுக பிரமுக ரான அரியானூர் பழனிசாமி என்பவர் மீது வியாழனன்று சேலம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், கடந்த 2019 ஆம் ஆண்டு கூட்டுறவு வங்கியில் அலுவலக உதவியாளர் பணிக்காக விண்ணப்பித்திருந்து நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். அப்போது அரியானூர் பழனிசாமியால் அனுப் பப்பட்ட ஒருவர், அதிமுக நிர்வாகி பழனி சாமி என்பவர் அழைத்து வர சொன்ன தாகவும், கட்டாயம் அவர் வேலை வாங் கித் தருவார் என்றும் என்னிடத்தில் கூறி னார். அதன்பேரில் சென்றபோது அங் கிருந்த பழனிசாமி “நான் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கூட்டுறவுத்துறை தலைவர் இளங்கோவன் ஆகியோ ருக்கு மிகவும் நெருக்கமானவன். கூட்டு றவுத்துறை சம்பந்தமான வேலை களுக்கு தொகை வாங்குகிற பொறுப்பை இளங்கோவன் என்னிடத் தில் ஒப்படைத்திருக்கிறார். ரூ.20 லட்சம் கொடுத்தால், உனக்கு இளநிலை உதவி யாளர் பதவி வாங்கித் தருகிறேன், என்று கூறியுள்ளார். இதனால் எனது தந்தை வைத்தி ருந்த சேமிப்புத்தொகை ரூ.10 லட் சத்தை, பழனிசாமியிடம் கொடுத்தேன். அப்போது அவர், உனக்குத் தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் யாரேனும் இருந்தால் அவர்களுக்கும் வேலை வாங்கித் தருகிறேன், என்றார். அவரை நம்பி எனது நண்பர்கள் மூவ ரிடம் தலா ரூ.8 லட்சம் என ரூ.24 லட் சத்தை வாங்கி வந்து அவரிடத்தில் ஒப்படைத்து, அவர்களைப் பற்றிய விவ ரங்களை தெரிவித்தேன். ஆனால், வேலைக்கான உத்தரவு வாங்கித்தராத காரணத்தினால், பணத்தை திரும்பத் தரும்படி வலியுறுத்தினேன். சில மாதங்கள் கழித்து ஒரு வேலைக்கான உத்தரவை கொடுத்தார். அதை வைத்துக்கொண்டு கூட்டுறவுத் துறையை அணுகிய போது ‘அது போலியாக தயாரிக்கப்பட்ட உத்தரவு’ என்றும், அப்படி ஒரு உத்தரவு கூட்டுற வுத் துறையால் வழங்கப்படவில்லை என்பதும் தெரியவந்தது. இதனால் ஏமாற்றப்பட்ட நான், கடன் வாங்கி எனது நண்பர்கள் கொடுத்த பணத்தை திருப்பியளித்தேன். கடந்த ஐந்தாண்டு காலங்களில் பழனிச்சாமியி டம் பணத்தை திரும்ப கேட்கும் போதும் அவர் கடுமையாக திட்டி தாக்கி வந்தார். இதுகுறித்து கடந்த 2023 ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் புகாரளித்தும் எவ் வித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்நிலையில், செவ்வா யன்று பழனிச்சாமிக்கு போன் செய்த போது, அவர் மிக மோசமாக திட்டிய தோடு, கொலை மிரட்டல் விடுத்தார். எனவே, பணத்தை மோசடி செய்து விட்டு, கொலை மிரட்டல் விடுக்கும் பழனிச்சாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என அதில் தெரிவிக்கப்பட் டுள்ளது.