tamilnadu

img

ரூ.3.75 கோடி மோசடி போலிச்சாமியார் ஜக்கி வாசுதேவ் வீடியோ பார்க்கத் தடை

ரூ.3.75 கோடி மோசடி போலிச்சாமியார் ஜக்கி வாசுதேவ் வீடியோ பார்க்கத் தடை

பெங்களூரு கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே சி.வி.ராமன்நகர் பகுதி யில் வசித்து வரும் 57 வயது பெண் ஒருவர் தனது செல்போனில் போலிச்சாமி யார் ஜக்கி வாசுதேவ் (கோவை ஈஷா அறக்கட்டளை) பேசும் ஒரு வீடியோவை கண்டார். அந்த வீடியோவில் முதலீடு செய்தால், அதிக லாபம் பெற்றுக் கொ டுப்பதாக மின்னஞ்சல் மற்றும் செல் போன் எண்ணை பதிவிடும்படியும் ஜக்கி வாசுதேவ் பேசி இருந்தார். இதனை நம்பிய  அந்த பெண் லிங்கை கிளிக் செய்து மின்னஞ்சல், செல் போன் எண்ணை பதிவிட்டார். ஜக்கி வாசுதேவ் போன்று பேசிய மர்ம நபர்கள் வற்புறுத்தலின் பேரில் குறிப்பிட்ட இடைவெளியில் ரூ.3.75 கோடியை அந்த பெண் முதலீடு செய்தார். ஆனால் அவர் முதலீடு செய்த பணத்திற்காக அதிக லாபம் எதையும் மர்மநபர்கள் கொடுக்க வில்லை. இதனால் ரூ.3.75 கோடியை திரும்ப எடுக்க அப்பெண் முயன்றார். ஆனால் பணத்தை திரும்ப எடுக்க முடியாமல் போனது. மர்மநபர்களை தொடர்பு கொள்ள முயன்ற போது, 2 பேரின் செல்போன்களும் அணைக் கப்பட்டு இருந்தது. அப்போது தான் மர்மநபர்கள் தன்னி டம் ரூ.3.75 கோடியை வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் ஜக்கி வாசுதேவ் பேசுவது போன்று தொழில் நுட் பத்தை பயன்படுத்தி வீடியோ எடுத்து  சமூக வலைதளத்தில் வெளியிட்டு தன்னை மோசடியில் சிக்க வைத்திருப்பதையும் பெண் உணர்ந்தார். இத்தகைய சூழலில் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பெங்களூரு சைபர் கிரைம் காவல்துறை வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ரூ.3.75 கோடி மோசடி பிரச்ச னையால் போலிச்சாமியார் ஜக்கி வாசுதேவ் வீடியோ பார்க்க வேண்டாம் என சமூக வலைத்தளங்களில் கன்னட மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.