tamilnadu

கோயம்புத்தூர் விரைவு செய்திகள்

தோழர் பி.கந்தசாமி காலமானார்

தருமபுரி, ஜூலை 4- சிபிஎம் நல்லம்பள்ளி ஒன்றியக்குழு உறுப்பினராக செயல் பட்ட தோழர் பி.கந்தசாமி வெள்ளியன்று காலமானார். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த தோழர் பி.கந்தசாமி, உடல் நலக்குறைவால் வெள்ளியன்று காலமானார். இவர் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நல்லம்பள்ளி ஒன்றியக்குழு உறுப்பினராக செயல்பட்டார். கந்தசாமியின் உடலுக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர்  ஏ.குமார், மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன், மூத்த தலை வர் பி.இளம் பரிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து, வி.மாதன், சோ.அருச்சுனன், வே.விசுவநாதன், நல்லம்பள்ளி ஒன்றியச் செயலாளர் எஸ்.எஸ்.சின்னராஜ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.என்.மல்லையன், டி.எஸ். ராமச்சந்திரன், கே.எல்லப்பன், ஆ.ஜீவானந்தம், என்.கந்த சாமி, கே.அன்பு உள்ளிட்டோர் மாலை வைத்து மரியாதை  செலுத்தினர்.

மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: ஆசிரியர் கைது  

உதகை, ஜூலை 4 - மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அறிவி யல் ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகில் உள்ள ஹோப்  பார்க் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (50).  அறிவியல்  ஆசிரியராக அரசு பள்ளியில் பணியாற்றினார். கடந்த  ஆண்டு ஜூன் மாதம் ஊட்டி அருகே உள்ள ஒரு அரசு பள்ளியில் பணியில் சேர்ந்தார்.அந்த அரசு பள்ளிக்கு பாலி யல் கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக போலீ சார் சென்றனர்.  அப்போது, குட் டச், பேட் டச் குறித்து மாணவ- மாணவிக ளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது. பயிற்சி வகுப்பு முடிந்ததும் பள்ளியில் இருந்த ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் அறிவியல் ஆசிரியர் செந்தில்குமார், உடலில்  தகாத இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்த தாக புகார் கூறியுள்ளார்.  பல மாணவிகளையும் அவர் மார்பு  பகுதி மற்றும் உடலின் பின்புறம் உட்பட பல இடங்களில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும்  ஒரு சில நேரங்களில் மாணவிகளுக்கு முத்தம் கொடுத்ததாக வும் கூறப்படுகிறது. முடிவில் பள்ளியில் படித்த 21 மாணவி களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த செந்தில்குமார் மீது  புகார் அளித்தனர்.  அதிர்ச்சி அடைந்த போலீசார் இதுகுறித்து உயர்  அதிகாரிகளுக்கும், குழந்தைகள் நலப்பிரிவு அதிகாரிக ளுக்கும் தகவல் தெரிவித்தனர்.  ஊட்டி ஊரக காவல் ஆய்வாளர் விஜயா தலைமையிலான போலீசார் விசா ரணை நடத்தி போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து  செந்தில்குமரை வியானன்று இரவு கைது செய்தனர்.

பாதுகாப்புக்கோரி காதல் தம்பதியினர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு

தருமபுரி, ஜூலை 4- மதம் மாறி திருமணம் செய்துகொண்ட காதல் தம்பதியி னர், பாதுகாப்பு கேட்டு தருமபுரி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், மாரண்டஅள்ளி பகுதியைச் சேர்ந்த  பிரதீப் என்பவரும், அதேபகுதியைச் சேர்ந்த ஷப்ரினா என்பவ ரும் கடந்த 6 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இவர்க ளின் காதலை ஷப்ரினாவின் பெற்றோர் ஏற்கவில்லை. மேலும், வேறு ஒருவரை திருமணம் செய்துகொள்ளும்படி வற் புறுத்தி வந்துள்ளனர். இதனால் அண்மையில் வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் பெங்களுருக்கு சென்று  திருமணம் செய்துகொண்டனர். இதனிடையே, ஷப்ரினா வின் பெற்றோர் மாரண்டஅள்ளி காவல் நிலையத்தில் தங்க ளது மகளை காணவில்லை என புகாரளித்தனர். இதை யடுத்து ஷப்ரினாவை கைப்பேசியில் தொடர்புகொண்ட போலீசார், நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தெரி வித்தனர். அதன்பேரில் தருமபுரி மாவட்ட காவல் கண் காணிப்பாளர் அலுவலகத்தில், வியாழனன்று ஆஜரான ஷப்ரினா, பாதுகாப்புக்கோரி மனு அளித்தார். அதில், எனது  கணவரை மதம் மாறும்படி உறவினர்கள் வலியுறுத்து கின்றனர். இதில் எங்களுக்கு விருப்பமில்லை. மேலும், எனது  பெற்றோர் மற்றும் உறவினர்கள் முலம் எங்களுக்கு அச்சுறுத் தல் உள்ளது. எனவே, எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண் டும், என கூறப்பட்டுள்ளது.