குடிநீர் கேட்டு சாலை மறியல்
உதகை, ஆக.13- கடந்த 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வழங்கப்படாத தால் கூடலூர் பொன்னூர் பகுதி மக்கள் காலிக்குடங்களு டன் சாலை மறியலில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே பொன்னூர் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக இப்பகுதி யில் குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் உள்ளது. இத னால், பாதிப்படைந்த பொதுமக்கள் நெல்லியாலம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து புதனன்று காலிக்குடங்களுடன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.