tamilnadu

சட்டப்போராட்டம் தொடரும் ரிதன்யாவின் தந்தை உறுதி

சட்டப்போராட்டம் தொடரும் ரிதன்யாவின் தந்தை உறுதி

அவிநாசி, ஆக.23– வரதட்சனைக் கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை  தனது சட்டப் போராட்டம் தொடரும் என அவரது தந்தை அண்ணாதுரை தெரிவித்துள்ளார். அவிநாசி கைகட்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த ரிதன்யா விற்கு கடந்த ஏப்ரல் மாதம் கவின்குமார் என்பவருடன் திரு மணம் நடந்தது. திருமணம் ஆன 78 நாட்களில் வரதட்சனைக் கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக் கில் ரிதன்யாவின் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மற்றும் மாமியார் சித்ராதேவி ஆகியோரை சேவூர் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என ரிதன்யாவின் பெற்றோர் சார்பில் இடையீட்டு மனு  தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த திருப்பூர்  மாவட்ட நீதிமன்றம், மூவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. பின்னர் சென்னை உயர்நீதிமன்றத் தில் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நி லையில், சென்னை உயர்நீதிமன்றம் ரிதன்யாவின் கணவர்,  மாமனார், மாமியார் ஆகியோருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை, குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங் கப்பட்டது வருத்தம் அளிப்பதாகவும், இருப்பினும் சட்டத்தின் மீது நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கை  சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் தனியாக வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார்.