வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தருமபுரி, ஆக.12- குறுகிய காலத்தில் அதிகளவில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடத்துவதை குறைத்து, உரிய அவ காசம் வழங்க வேண்டும் என வலியு றுத்தி வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறையில், மூன்றாண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ள 564 அலு வலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் குறுகிய காலத்தில் அதிகமான முகாம் கள் நடத்துவதை குறைத்து, வாரத் திற்கு இரண்டு முகாம்கள் மட்டுமே நடத்திடவும், இத்திட்டப்பணிகளை மேற்கொள்ள உரிய கால அவகாசம், கூடுதலான தன்னார்வலர்கள், நிதி ஒதுக்கீடு மற்றும் அடிப்படை கட்ட மைப்பு வசதிகளை வழங்க வேண் டும். சான்றிதழ் வழங்கும் பணிகள் மற்றும் உங்களுடன் ஸ்டாலின் உள் ளிட்ட அரசு சிறப்பு திட்டப் பணிகளை மேற்கொள்ள அனைத்து வட்டங்களி லும், புதிய துணை வட்டாட்சியர் பணி யிடங்களை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி, தமிழ்நாடு வரு வாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். தருமபுரி மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத் தின் மாவட்டத் தலைவர் துரை வேல் தலைமை வகித்தார். இதில் மாவட்டச் செயலாளர் ம.சிவன், இணைச்செய லாளர் த.ராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர். சேலம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு, வருவாய்த்துறை அலு வலர் சங்க மாவட்டத் தலைவர் அருள் பிரகாஷ் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் வெ. அர்த்தநாரி சிறப்புரையாற்றினார். இதில் மாவட்டப் பொருளாளர் அகி லன் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.