கிராமப்புறங்களில் வைக்கும் விநாயகர் சிலைகளை அந்தந்த பகுதி குளங்களில் கரைக்க கோரிக்கை
அவிநாசி,ஆக.29 அவிநாசி சுற்றுவட்டார கிராம பகுதிகளில் வைக்கப்படும் விநா யகர் சிலைகளை அப்பகுதிகளில் உள்ள குளங்களில் பொதுப்ப ணித்துறை அனுமதி பெற்று கரைக் குமாறு கிராம மக்கள் யோசனை தெரிவித்துள்ளனர். வருடம் தோறும் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் ஒரு சில பகுதிகளில் மூன்று நாட்கள் சிலை வைத்து பின்னர் ஊர்வலமாக எடுத் துச் சென்று கரைப்பதும், மற்ற சில பகுதிகளில் ஐந்து நாட்கள் சிலை களை வைத்திருந்து குளங்களுக்கு எடுத்துச் சென்று கரைப்பதும் நடை பெற்று வருகிறது. இதில் விநாய கர் சிலைகளை ஊர்வலமாக எடுத் துச் செல்லும் போது, போக்குவ ரத்து பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதற்காகப் போக்குவரத்தை மாற் றம் செய்வதும், பள்ளி குழந்தைக ளும் பகுதி நேரம் மட்டுமே பள்ளி செயல்பட்டு விடுமுறை அளிப்பது என மாற்றம் செய்யப்படுகின்றன. இது பொது மக்களுக்கு பல் வேறு விதத்தில் இடையூறு ஏற்ப டுத்துகின்றன. விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என சில அமைப்பினர் மாலை தொடங்கி இரவு வரை வேண்டு மென்றே நேரத்தை நீடித்து அவ திப்படுத்துகின்றனர். இந்த நிலை யில் அவிநாசி வட்டார சமூக நல ஆர்வலர்கள் இது போன்ற இடையூ றுகளைத் தவிர்க்க மாற்று யோச னைகளைத் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அத்திக்கடவு அவிநாசி திட்டம் செயல்பாட்டுக்கு வந்திருக் கும் நிலையில் கிராமப்புறங்களில் உள்ள குளங்களில் தண்ணீர் வரத்து உள்ளது. எனவே பொதுப் பணித்துறை அதிகாரிகளின் அனு மதி பெற்று, தீயணைப்புத்துறை வீரர்களுடன் விநாயகர் சிலை களை அந்தந்த பகுதி குளங்க ளுக்கு எடுத்துச் சென்று கரைக்க லாம். இதனால் போக்குவரத்து நெருக்கடி, பொது மக்களுக்கு ஏற்படும் இடையூறுகள் தவிர்க்கப்படும், எதிர்காலத்தில் இது போன்ற முறை களை பின்பற்ற மாவட்ட நிர்வாகம் தொடர்புடைய அமைப்பினரிடம் பேசி, வழிகாட்டி நடைமுறை கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
உடுமலையில் வெறி நோய் குறித்து விழிப்புணர்வு முகாம்
உடுமலை, ஆக.29- உடுமலைப்பேட்டை கால்நடை மருத்து வக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பில் வெள்ளியன்று பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் வெறி நோய் குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் மற்றும் இந்திய அர சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப தொடர் புக்கான தேசிய கவுன்சில் நிதியுதவியுடன் “விலங்கு வழி பரவல் நோய் குறித்து விழிப் புணர்வு முகாம் நடைபெற்றது. இளைஞர் களுக்கு வெறி நோய் (ரேபிஸ்) பற்றிய விழிப்புணர்வு முகாமில், வெறி நோய் காரணி கள் மற்றும் தடுக்கும் முறைகள், வெறி நோய் தடுப்பில் தடுப்பூசியின் முக்கியத்துவம், வெறி நோய் பற்றி தவறான புரிதல் என்ற தலைப்புகளில் மாணவர்கள் மத்தியில் விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டன. இந்த முகாமில் 140 பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரி யர்கள் கலந்து கொண்டனர். கால்நடை மருத் துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத் தின் கால்நடை பண்ணை வளாகத்தின் உத விப் பேராசிரியர் மருத்துவர் இரா.சங்கமேஸ் வரன் உட்பட கல்லூரியின் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.