tamilnadu

img

தருமபுரி சிப்காட் பணிகளை முடித்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க கோரிக்கை

தருமபுரி சிப்காட் பணிகளை முடித்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க கோரிக்கை

வறட்சியான மாவட்டங்களில் ஒன்றான தருமபுரி யில், வேலைவாய்ப்பின்மை காரணமாக மக்கள் வெளியூர்களுக்கும், கர்நாடக மாநிலத்திற்கும் குடிபெயர்வதைத் தடுக்கும் நோக்கில், சிப்காட் (SIPCOT) தொழிற்பேட்டை பணிகளைத் துரிதப்படுத்தி,  இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என்று மக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டத்திலிருந்து 1965  ஆம் ஆண்டு அக் டோபர் 2 ஆம் தேதி வளர்ச்சி மற்றும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு தருமபுரி தனி மாவட்டமாக உரு வாக்கப்பட்டது. பின்னர், 2003-ஆம் ஆண்டு நிர்வாக வசதிக்காக தருமபுரியிலிருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் பிரிந்தது. தற்போது தருமபுரி மாவட்டத்தில் 7 தாலு காக்கள், 10 ஒன்றியங்கள், 10 பேரூராட்சிகள், ஒரு நகராட்சி  மற்றும் 251 ஊராட்சிகள் உள்ளன. இம்மாவட்டத்தின் முக்கியத் தொழில் விவசாயம். சுமார் 70% மக்கள் விவசாயம் மற்றும் அது சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளனர். எனினும், இம்மாவட்டம் மாநிலத்தின் மிகவும் வறட்சியான பகுதிகளில் ஒன்றாக உள்ளது. காவிரி மற்றும் தென்பெண்ணை ஆறுகள் மாவட்டத்தைச் சுற்றி ஓடினாலும், போதிய நீர்ப்பாசனத் திட்டங்கள் இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட் டுள்ளது. இதன் விளைவாக, சுமார் 3 லட்சம் பேர்  வேலை தேடி வெளியூர்களுக்கும், கர்நாடக மாநிலத் திற்கும் கூலி வேலைக்காகச் சென்றுள்ளனர். வேலையின்மை காரணமாக மக்கள் வெளியூ ருக்குக் குடிபெயருவதைத் தவிர்க்கவும், படித்த இளை ஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் வேண்டும் என்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தொடர் போராட்டங்களின் அடிப்படை யில், தமிழக அரசு கடந்த 2008-ஆம் ஆண்டு தருமபுரி யில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்படும் என்ற அறி விப்பை வெளியிட்டது. முதற்கட்டமாக, நல்லம்பள்ளி வட்டம், தடங்கம் பாலஜங்கனஅள்ளி பகுதியில் 1,733 ஏக்கர் நிலம் சிப்காட் தொழிற்பேட்டைக்காகக் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில், 200 ஏக்கர் பரப்பளவில் தொழிற்பேட்டைக்கான அடிப்படைப் பணிகளை முடிக்க ரூ. 93 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது. ரூ. 12.39 கோடியில் நுழைவாயில், 1.5 கி.மீ. நீளத்திற்கு  4 வழி அணுகுசாலை, பெயர் பலகைகள், மின் விளக்கு கள், சாலைகளை ஒட்டி மழைநீர் வடிகால்கள் உள்ளிட்ட அடிப்படைப் பணிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தொழிற்பேட்டையில் பல்வேறு வகையான தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களை  அமைப்பதற்காக 201 நிறுவனங்கள் விண்ணப்பித்துள் ளன. இவற்றில், முதற்கட்டமாக 7 நிறுவனங்களுக்குத் தொழில் தொடங்குவதற்கான நிலம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளதாக, அண்மையில் தருமபுரியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எனவே, தருமபுரி மாவட்ட மக்கள் நலன் கருதி, வேலைக்காக வெளியூர்களுக்குச் செல்லும் நிலையைத் தடுக்க, அரசு சிப்காட் பணிகளை இன்னும் விரைந்து முடித்து, நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை உடனே தொடங்க வழிவகை செய்ய வேண்டும் என்றும், அதன் மூலம் மாவட்ட இளைஞர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.  -லெனின்