tamilnadu

வனப்பகுதிகளில் 725 ஹெக்டேரிலிருந்த முட்செடிகள் அகற்றம்

வனப்பகுதிகளில் 725 ஹெக்டேரிலிருந்த முட்செடிகள் அகற்றம்

தருமபுரி, ஜூலை 23- வன உயிரினங்களின் மேய்ச்சலுக்காக தருமபுரி மாவட்ட வனப்பகுதிகளில் சுமார் 725  ஹெக்டேரில் இருந்த முட்செடிகள் வனத் துறை சார்பில் அகற்றப்பட்டு வருகிறது. தருமபுரி மாவட்டத்தின் மொத்த நிலப் பரப்பில் சுமார் 39 சதவிகித நிலங்கள் வனப் பகுதிகளாக உள்ளன. அதில் தருமபுரி, பாலக் கோடு, பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப் பட்டி, வேங்கடசமுத்திரம் உள்ளிட்ட 6 வனச் சரகங்களில் உள்ள வனப்பகுதிகளில் புலி,  சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான விலங்குகள்  காணப்படுகின்றன. இந்நிலையில், வன  விலங்குகள் உணவுதேடி வனப்பகுதியை யொட்டி அமைந்துள்ள கிராமப் பகுதிகளுக் குள் நுழைவதும், அவற்றை வனத்துறையி னர் வனப்பகுதிகளுக்குள் விரட்டுவதும் தொடர்கின்றன. இதுகுறித்து வனவிலங்கு ஆர்வலர்கள், வனத்துறையினர், இயற்கை மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பல் வேறு தரப்பினரிடம் மேற்கொண்ட ஆய்வுக ளில், புல், இலை, தழை ஆகியவற்றை உண வாக உள்கொள்ளும் வனவிலங்குகள், பெரும்பாலும் உணவுகளுக்காகவே வனத்தைவிட்டு வெளியே வருவது தெரிய வந்தது. இதையடுத்து வனப்பகுதிகளில் மேய்ச்சலிலுள்ள இடையூறுகளை களைந்து,  வன விலங்குகள் வனங்களுக்குள்ளேயே மேய்வதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தி னால், விலங்குகள் வனப்பகுதிகளை விட்டு  வெளியே வருவது தடுக்கப்படும் என முடிவு  செய்யப்பட்டது. இதில், குறிப்பாக உண்ணிச்செடி எனவும்,  லண்டானா எனவும் அழைக்கப்படும் முள் செடிகள் வனப்பகுதிகளில் அதிகளவில் பரவி யிருப்பதும், அவை விலங்குகளின் உண வுக்கு பயன்படும் புல், செடி, கொடிகளை  வளரவிடாமல் தடுப்பதும் கண்டறியப்பட் டது. குறிப்பிட்ட அந்த முள்செடிகளை அகற் றும் பணிகளில் கடந்த சில ஆண்டுகளாக வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தருமபுரி மாவட்ட வன அலுவ லர் ராஜாங்கம் கூறுகையில், தருமபுரி வனப் பகுதிகளில் மேய்ச்சலில் ஏற்படும் வன விலங்குகளுக்கான இடர்பாடுகளை களைய  துறைரீதியாக மேற்கொண்ட நடவடிக்கை யில், லண்டனா முள் (களை) செடிகளால், சிறு  விலங்கினங்கள் அதிகளவில் பாதிக்கப்பட் டது தெரியவந்தது. அதன்பேரில், அவற் றுக்கு இடையூறாக உள்ள முள்செடிகளை அகற்றி வருகிறோம். இப்பணிகளை மேற் கொள்ள நிதிப்பற்றாக்குறை நிலவிவந்த  நிலையில், உயர்நீதிமன்றம் உத்தரவின்பே ரில் அரசு தற்போது அதிகளவில் நிதி ஒதுக்கி யுள்ளது. இதனால், களை மற்றும் முள்செடி களை அகற்றும் பணிகள் தீவிரப்படுத்தப்பட் டுள்ளன. கடந்தாண்டில் 425 ஹெக்டேர், நிக ழாண்டில் ஏப்ரல் முதல் இதுவரையில் சுமார்  300 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தில் இருந்த  முள்செடிகள் அகற்றப்பட்டுள்ளன, என் றார்.