கோவில் தேர் ஊர்வலத்தில் மத நல்லிணக்கம்
கோவை, ஜூலை 5- கோவையில் ஜெகநாத் சுவாமி தேர் ஊர்வலத்தில் பங்கேற்றவர்களை பள்ளிவாசல் நிர்வாகிகள் வரவேற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் சனியன்று நடைபெற்ற ஜெகநாத் சுவாமி தேர் ஊர்வலம் நடைபெற்றது. இந்த தேர், அத்தார் ஜமாத் பள்ளிவாசல் வழியாக வந்த போது ஜமாத் நிர்வாகிகள், ஊர்வலத்தில் பங்கேற்ற பக்தர்களை பேரீச்சம்பழம் வழங்கி உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து, கோவில் நிர்வாகிகள் பள்ளிவாசல் நிர்வாகிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வு, மத நல்லிணக்கத்தின் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்தது.