tamilnadu

img

மதத்தை அரசியலில் இருந்து பிரித்து வைக்க வேண்டும் நவீன மனிதர்கள் பொதுக்கூட்டத்தில் ஆ.ராசா எம்.பி., பேச்சு

மதத்தை அரசியலில் இருந்து பிரித்து வைக்க வேண்டும்  மனிதர்கள் பொதுக்கூட்டத்தில் ஆ.ராசா எம்.பி., பேச்சு

திருப்பூர், செப்.22 - மக்களை பிளவுபடுத்தி வைத்தி ருக்கும் சமுதாயத்தில், மதத்தை அரசியலில் இருந்து பிரித்து வைக்க வேண்டும், அரசியல் சாச னத்தை பாதுகாக்க வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பி னர் ஆ.ராசா கூறினார். திருப்பூரில் ஞாயிறன்று நவீன  மனிதர்கள் அமைப்பு ஏற்பாடு செய் திருந்த மதத்தால் பிரிந்தாலும், மன தால் இணைவோம் என்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்று திமுக துணை பொதுச் செயலாளர் ஆ. ராசா பேசியதாவது: திருப்பூர் மாநக ரில் தொடங்கியுள்ள இந்த முழக்கம்  தமிழகம் முழுவதும் பரவ வேண் டும். மதம் எப்படி மக்களை பிரித்தா லும் நாம் சேர்ந்து இருக்க வேண்டும்  என்று அரசியல்படுத்தி தான் பேச வேண்டும். மதம் கூறு போடுகிறது, சாதி பிரிக்கிறது. இந்த பிரி வினையை விரிவாக்க பார்க்கிறார் கள் கலவரக்காரர்கள். அரசியலில் மதம் கலந்தால் அது பகையை உருவாக்கும். அரசி யலில் மதம் கலக்கப்பட்டு இங்கே  மதம் கோலோச்சுகிறது. அதை எப் படி வீழ்த்தப் போகிறோம் என்பது தான் நம்முன் உள்ள சவால். மதத் தையும் அரசியலையும் பிரித்து வைக்க வேண்டும் என்பதுதான் முக் கியம்.  நாடு விடுதலை பெற்றதற்கு பிறகு வெள்ளையர்கள் ஆட்சி அகற்றப்பட்டதற்கு பிறகு எண் ணற்ற மத, மொழி, சாதி வேறுபாடுக ளாக பிரிந்து கிடக்கும், இத்தனை  வேறுபாடுகளை கொண்ட நம்மை  ஒன்றிணைக்க சிந்தித்து உருவாக்கி யதுதான் அரசியல் சாசனம். மதச் சார்பற்ற சமதர்ம ஜனநாயக இந்திய  குடியரசு என்று முதல் பக்கத்தில் குறிப்பிடப்பட்டது. இதுதான் அரசி யல் சாசனத்தின் முதல் வரி. நம் நாட்டில் இந்து தேசியம் என்ற தத்துவத்தை முதன் முதலில்  கொண்டு வந்தவர் சாவர்க்கர். இந்து ராஜியம் அமைந்தால் இந்த  நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்து என்று அம்பேத்கர் கூறினார். மதத்தை அரசியலில் இருந்து பிரிக்க வேண்டும் என ஆ. ராசா கூறினார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சத்யராஜ் கூறியதாவது, நவீ னம் என்பது உடுத்தும் ஆடை யிலோ, முடி கட்டிங் செய்வதிலோ இருக்க கூடாது. விஞ்ஞான வளர்ச்சி நவீனம் வந்ததற்குப் பிறகு புத்தியில் நவீனம் இருக்க வேண்டும். நாடுகள் எல்லை இல் லாமல் ஒரே உலகமாக இருக்க  வேண்டும், ஏன் அது முடியவில்லை  என்ற சிந்தனை வந்தது. உலகம்  ஒன்றாக இருக்க வாய்ப்பு இல்லை.  அதேசமயம் வேற்றுமையில் ஒற் றுமை என்பதுதான் வாய்ப்பு.  நான் நடிகராக நடிப்புத் துறை யில் பணம் சம்பாதித்து பணக்கார னாக இருக்கிறேன் எனக்கு யார் ஆண்டாலும் கவலையில்லை. ஆனால் தமிழ்நாடு பாதுகாப்பு இருக்க வேண்டும் என்றால் தமிழ் நாட்டில் தற்போதைய இந்த திரா விட மாடல் அரசு இருக்க வேண்டும்.  மதத்தால் கொள்கையால் பிரிந்து இருந்தாலும் நாம் ஒன்றாக இணைந்து இருக்க வேண்டும். தமிழ்நாடு சீர்குலையாமல் இருக்க  மதத்தால் பிரிந்தாலும் மனத்தால் இணைவோம் என்ற இந்த தலைப்பு  தான் முக்கியம். இவ்வாறு நடிகர் சத்யராஜ் கூறினார்.