இலங்கைச் சிறையில் உள்ள மீனவர்களை விடுவித்திடுக!
இராமேஸ்வரத்தில் மீனவர்கள் உண்ணாவிரதம்
இராமநாதபுரம், ஆக.16- இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மீன்பிடி துறை முகத்திலிருந்து மீன்பிடிக்க செல் லும் மீனவர்களை இலங்கை கடற் படை எல்லை தாண்டி மீன்பிடித்த தாக கைது நடவடிக்கையில் ஈடு பட்டு வருகிறது. இராமேஸ்வரம் தங்கச்சி மடத்தில் இலங்கை கடற்படையால் ஏழு விசைப்படகுகளும், ஒரு நாட்டுப்படகு உட்பட 57 மீனவர் களை கைது செய்து சிறையில் உள் ளவர்களை விடுவிக்கக் கோரியும், இலங்கையில் சேதமடைந்த விசைப் படகுகளுக்கு தமிழக அரசால் இழப்பீடு தொகையில் விடுபட்டு போன, நாட்டுப்படகுகளுக்கும் இழப்பீடு வழங்க கோரியும் மீன வர் அமைப்புகள் சார்பாக உண்ணா விரத போராட்டம் நடைபெற்றது. கூட்டமைப்பின் தலைவர் பி. சேசுராஜா தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.கருணாகரன், தாலுகாச் செயலாளர் ஜி.சிவா, மாவட்டக் குழு உறுப்பினர் இ.ஜஸ்டின் ஆகி யோர் பேசினர். இந்த உண்ணாவிரதத்தில் ஒன்றிய, மாநில அரசுகளுக்கு எதி ராக மீனவர்கள் கண்டன முழக் கங்களை எழுப்பினர். சிபிஎம் தாலுகா குழு உறுப்பினர்கள் அசோக், கே.தியாகு, மூத்த தோழர் யூ.பாக்கியராஜ், தர்மபுத்திரன் மற்றும் 500 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.