tamilnadu

தனியார் பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

தனியார் பேருந்து மோதியதில் பெண் உயிரிழப்பு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

சேலம், ஆக.26- அயோத்தியாபட்டணம் பகுதியில் தனியார் பேருந்து மோதியதில் படு காயமடைந்த பெண் சிகிச்சைப் பல னின்றி திங்களன்று உயிரிழந்த நிலை யில், அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், அயோத்தியாப் பட்டணம் அருகே உள்ள ராம் நகர், ஏரிக் காட்டைச் சேர்ந்த ஜெயா (55) என்ப வர், ஆக.20 ஆம் தேதியன்று இரவு அயோத்தியாப்பட்டணம் பிரதான சாலையில் அரிசி ஆலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியே வந்த அடையாளம் தெரி யாத வாகனம் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் பலத்த காயமடைந்த ஜெயாவை, அவ்வழி யாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு அம்மாப்பேட்டையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதன் பின் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த காரிப் பட்டி காவல் துறையினர், விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்த னர். அதில், தன் மீது பேருந்து மோதிச் சென்றதாக ஜெயா கூறினாா். தொடர்ந்து சிகிச்சையிலிருந்த அவர், திங்களன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில், அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடு பட்டனர். அதில், தனியார் பேருந்து ஓட்டு நரை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம் என தெரிவித்து முழக் கங்களை எழுப்பினர். இதையடுத்து,  காவல் துறையினர் பேச்சுவார்த்தை  நடத்தி, உரிய விசாரணை செய்து நடவ டிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனைத்தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்தனர்.