ரேபிஸ் இல்லாத மாநகரம்: 24 மணி நேர ஹாட்லைன் சேவை
கோவை, ஜூலை 4- தமிழகத்திலேயே முதல் முறை யாக, சாலையோர ஆதரவற்ற நாய் களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்து வதற்காக 24 மணி நேர ஹாட்லைன் எண்ணை கோவை மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. கோவையில் சுமார் 1.15 லட்சம் சாலையோர ஆதரவற்ற நாய்கள் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள் ளது. இந்த நாய்களின் எண்ணிக் கையைக் கட்டுப்படுத்தும் வகை யில், உக்கடம், ஒண்டிப்புதூர், வெள்ளலூர், சோமையம்பாளை யம் ஆகிய நான்கு இடங்களில் கருத்தடை மையங்கள் மாநக ராட்சி நிர்வாகத்தால் செயல்பட்டு வருகின்றன. மேலும், தன்னார்வ அமைப்புகளின் துணையுடன் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணி களும் நடைபெற்று வருகின்றன. இந்த புதிய ஹாட்லைன் சேவை மூலம், கோவை மாநகரப் பகுதிக ளில் ரேபிஸ் பாதிப்புள்ள நாய்க ளைக் கண்டறிந்தால், உடனடியாக 9843789491 என்ற எண்ணுக்கு அழைப்பதன் மூலம் கால்நடை மருத்துவர் அடங்கிய குழு அங்கு செல்லும். அப்பகுதியில் உள்ள அனைத்து நாய்களுக்கும் ரேபிஸ் தடுப்பூசியைச் செலுத்தும். மாநகராட்சி சுகாதார அலுவலர் பூபதி இதுகுறித்து கூறுகையில், “ரேபிஸ் பாதிப்புள்ள நாய்களைக் கண்டறிந்து, அவற்றுக்கும் மற்ற நாய்களுக்கும் தடுப்பூசி செலுத்த இந்த ஹாட்லைன் பெரிதும் உத வும். மேலும், நாய் அல்லது பிற விலங்குகள் கடிப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பொதுமக்க ளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வும் இது உதவும். இந்த தொடர்ச்சி யான நடவடிக்கைகள் மூலம் அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளில் ரேபிஸ் இல்லாத கோவை மாநகரம் உரு வாகும் என நம்புகிறோம்” என் றார். மேலும், கடந்த இரண்டு மாதங் களுக்கு முன் நடைபெற்ற மாபெ ரும் தடுப்பூசி முகாமில் சுமார் 1 லட்சம் நாய்கள் கண்டறியப்பட்டதா கவும், அவற்றில் 10,000 நாய்க ளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள் ளதாகவும் அவர் குறிப்பிட்டார். மீத முள்ள நாய்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தற்போ துள்ள 4 கருத்தடை மையங்களில் இதுவரை 13,000 நாய்களுக்கு கருத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும், கூடுதலாக 3 கருத்தடை மையங் கள் அமைக்கப்பட உள்ளது. மாவட்டத்தின் புறநகர் பகுதிகளி லும் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டுள்ளார். விலங்கு நல ஆர்வலர் மினி வாசு தேவன் பேசுகையில், “ரேபிஸ் ஒரு குணப்படுத்த முடியாத நோய் என் றாலும், 100 சதவீதம் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகளால் அத னைத் தடுக்க முடியும். இந்த திட்டம் ரேபிஸ் பாதிப்புள்ள நாய்களைக் கண்டறிந்து, பாதிப்பிற்கான கார ணத்தை ஆராய்ந்து, தொடர்பில் இருந்த நாய்களுக்கும் தடுப்பூசி செலுத்த உதவும். மேலும், வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு ஒவ் வொரு ஆண்டும் தடுப்பூசி செலுத்த வேண்டியதன் அவசியம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்ப டுத்துகிறோம். இந்த திட்டத்தின் மூலம் நாய்கள் குறித்த முழுமை யான தகவல்களையும் சேகரித்து வருகிறோம். எங்கள் குழுவில் கால் நடை மருத்துவர்கள், நாய் பிடிப்ப வர்கள், பராமரிப்பாளர்கள் என அனைவரும் இணைந்து பணியாற் றுகிறோம்” என்று கூறினார். போலியோ ஒழிப்பு இயக்கத் தைப் போலவே, ரேபிஸ் ஒழிப்பு நடவடிக்கைகளும் தடுப்பூசி செலுத் துவதன் மூலமும், மக்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்துவதன் மூலமும் சாத்தியமாகும் என்ற நம்பிக்கை யில், தன்னார்வ அமைப்புகளுடன் இணைந்து கோவை மாநகராட்சி மேற்கொண்டுள்ள இந்த முயற் சிக்கு மக்களிடையே பரவலான வர வேற்பு கிடைத்துள்ளது. கோவை மாநகரம் ரேபிஸ் இல்லாத ஒரு பாது காப்பான நகரமாக மாறுவதற்கு இந்த புதிய ஹாட்லைன் சேவை ஒரு முக்கியப் படியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. (கவி)