tamilnadu

img

அறிவியல் இயக்கம் சார்பில், வினாடி - வினா போட்டி

அறிவியல் இயக்கம் சார்பில், வினாடி - வினா போட்டி

சேலம், செப்.13- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில்  நடத்தப்பட்ட மாவட்ட அளவிலான வினாடி – வினா போட்டியில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சேலம் மாவட்டக்குழு சார்பில், மாவட்டம் முழுவதும் உள்ள ஒன்றிய அளவில் வினாடி – வினா போட்டிகள் நடத்தப்பட்டு, அதில் வெற்றி பெற்று சிறப்பிடம் பெற்ற 43  குழுக்களுக்களை சேர்ந்த 116 மாணவர்க ளுக்கான மாவட்ட போட்டிகள் சனியன்று நடைபெற்றது. சேலம் நான்கு ரோடு சிறு மலர் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஒருங் கிணைப்பாளர் டோமினிக் ஒருங்கிணைப் பில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் செங் கோடன் தலைமையில் போட்டி நடைபெற் றது. மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சுரேஷ் குமார், அறிவியல் இயக்க செயல்பாடுகளை விளக்கினார். போட்டிகளில் நடுவர்களாக வும் ஒருங்கிணைப்பு செயல்பாடுகளையும் காட்வின், ரேகா, செங்கோடன், ஐடா பிரி ஸில்லா, கவின்ராஜ் உள்ளிட்டோர் மேற் கொண்டனர். மாவட்டச் செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.