tamilnadu

img

கடம்பத்தூர் மும்முடி குப்பத்தில் தரமான தொகுப்பு வீடுகள் கட்டித் தர வேண்டும்

கடம்பத்தூர் மும்முடி குப்பத்தில் தரமான  தொகுப்பு வீடுகள் கட்டித் தர வேண்டும்

திருவள்ளூர், செப். 21- கடம்பத்தூர் மும்முடி குப்பத்தில் உள்ள பழைய தொகுப்பு வீடுகள் அகற்றி விட்டு  பி.என்.ஜென்மன் திட்டத்தில் தரமான தொகுப்பு வீடுகளை விரைவில் கட்டி கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு மலை வாழ் மக்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம் வயலூர் ஊராட்சிக்கு உட் பட்டது மும்முடி குப்பம். இங்கு பழங்குடி இருளர் இனத்தை சேர்ந்த 4 குடும்பங்க ளுக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு அரசு தொகுப்பு வீடு கட்டிக் கொடுத்தது. இவை மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் நிலை யில் உள்ளதால், புதிய வீடுகள் கட்டித்தர  வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டுகொள்ள வில்லை. இந்நிலையில் பரிமளா என்பவரின் வீட்டின் மேற்கூரை கான்க்ரீட் தொகுப்பு வீடு வெள்ளியன்று (செப் 19) காலை முற்றிலு மாக இடிந்து விழுந்துள்ளது. பரிமளா கர்ப்பிணி பெண் என்பதால் தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளதால் இந்த விபத்திலி ருந்து நல்வாய்ப்பாக உயிர் தப்பினார். தொகுப்பு வீடுகள் எல்லாம் பலவீன மடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இவற்றை அகற்றி விட்டு புதிய தாக தொகுப்பு வீடுகளை கட்டி கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி மனுக்கள் பல முறை கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலு வலர்களிடம் கொடுத்தும் எந்தப் பயனும் இல்லை என அவர்கள் குற்றம் சாட்டு கின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.தமிழ்அரசு கூறுகையில், மும்முடி குப்பத்தில் உள்ள பழைய தொகுப்பு வீடு களை அகற்றி விட்டு பி.என்.ஜென்மன் திட்டத்தில் தரமான தொகுப்பு வீடுகளை விரைவில் கட்டி கொடுக்க வேண்டும். மேலும் திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் உள்ள இருளர் இன மக்கள் குடியிருக்கும் தொகுப்பு வீடுகளை ஆய்வு செய்து புதிய தொகுப்பு கட்டி கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.