புடின்-டிரம்ப் சந்திக்க உடன்பாடு ரஷ்யா தகவல்
அமெரிக்காவின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ரஷ்ய ஜனாதிபதி புடினை சந்தித்துள்ளார். இதனை தொடர்ந்து புடின்-டிரம்ப் சந்திக்க உடன்பாடுகள் ஏற் பட்டுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி மாளிகை தெரி வித்துள்ளது. உக்ரைனுடன் உடனடியாக அமைதி உடன்படுக்கை மேற்கொள்ள முன்வர வேண்டும்; இல்லையெனில் ரஷ்யா மீது மேலும் அதிக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா மிரட்டல் விடுத்து வரும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
2026 பிப்ரவரி மாதம் : வங்கதேச நாடாளுமன்றத் தேர்தல்
வங்கதேச நாடாளுமன்ற தேர்தல் 2026 பிப்ரவரி மாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஷேக் ஹசீனா அரசுக்கு எதிராக அந்நாட்டின் மாணவர்களின் நாடுதழுவிய அளவில் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அதன் பிறகு அமைக்கப்பட்ட முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு, தேர்தல் நடத்துவதற்கு முக்கியத்துவம் தராமல் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
காசாவில் ராணுவ நடவடிக்கைகள்: இஸ்ரேலுக்கு ஐ.நா. எச்சரிக்கை
காசா முழுவதையும் ஆக்கிரமிக்க இஸ்ரேல் ராணுவ நடவடிக்கைகளை அதிகரிக்க உள்ளது. இது குறித்து இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அதி காரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளதா கவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது லட்சக்கணக்கான பாலஸ் தீனர்களுக்குப் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய விளைவுகளை உருவாக்கும். எனவே இந்த நடவடிக்கையை முன்னெடுக்கக் கூடாது என ஐ.நா. பொதுச் செயலாளரின் உதவிச் செயலாளர் மிரோஸ்லாவ் ஜென்கா எச்சரிக்கை விடுத்துள்ளர்.'
கானாவில் ஹெலிகாப்டர் விபத்து பாதுகாப்பு அமைச்சர் உள்பட 8 பேர் பலி
அக்ரா,ஆக.7- கானா நாட்டில் நடந்த ஹெலி காப்டர் விபத்தில் அந்நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சர் உள்பட 8 பேர் பலியாகியுள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவின் தலைநகர் அக்ராவிலி ருந்து அந்நாட்டின் அஷாந்தி பிராந்தியத்தில் உள்ள ஓபுவாசிக்கு என்ற பகுதிக்கு ஆகஸ்ட் 6 அன்று காலை 9 மணியளவில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சென்றது. அதில் அந்நாட்டின் பாது காப்புத்துறை அமைச்சர் எட்வார்டு ஒமானே பொவாமா, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அல்ஹாஜி முர்தாலா முகமது ஆகியோர் பயணித்துள்ளனர். இவர்களுடன் 8 அதிகாரிகளும் அந்த ராணுவ ஹெலிகாப்டரில் பயணித்தனர். ஹெலிகாப்டர் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே ரேடாரில் இருந்து விலகியதாகவும். மேலும் ராணுவ தகவல் தொடர்பு மையத்து டனான அதன் தொடர்பையும் இழந்ததாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. ஹெலிகாப்டர் தொ டர்பை இழந்த சிறிது நேரத்தி லேயே கட்டுப்பாட்டை இழந்து வனப்பகுதியில் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது எனவும் தெரிவிக்கப்பட்டது. ராணுவத் தகவல் தொடர்பு மையத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதால் ஹெலி காப்டர் விபத்துக்குள்ளான பகுதி யை கண்டுபிடிப்பது சிரமமாக இருந்ததாக ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிறிது நேர தேடுதலுக்கு பிறகு விபத்துப்பகுதியை சென்றடைந்த ராணுவத்தினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பலியானவர்களின் உடல்களை மீட்ட பிறகு அதிகா ரப்பூர்வ அறிவிப்பையும் வெளி யிட்டனர். தற்போது இந்த விபத்து தொ டர்பாக விசாரணை நடத்த அந் நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அமைச்சர்கள் உயிரிழந்த தை தொடர்ந்து தேசிய துக்க தினமாக கானா அரசு அறி வித்துள்ளது. இந்த ஹெலிகாப்டரில் பய ணித்தவர்கள் சட்டவிரோதச் சுரங்கம் தொடர்பான விசார ணைக்கு சென்றதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கானாவில் சட்டவிரோதச் சுரங் கங்கள் அதிகமாகச் செயல்படு கின்றன. இது அந்நாட்டின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்ச னையாக உள்ளது குறிப்பி டத்தக்கது.