tamilnadu

img

மாதர் சங்க இடைக்கமிட்டி மாநாடுகள்

மாதர் சங்க இடைக்கமிட்டி மாநாடுகள்

நாமக்கல், ஆக.19- மாதர் சங்கத்தின் புதுச்சத்திரம் பிரதேசக்குழு மற்றும் எலச்சிபாளையம் கிழக்கு ஒன்றியக்குழு மாநாடுகளில் நிர் வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரம் பிரதேசக்குழு 3 ஆவது மாநாடு, திங்க ளன்று ஏலூரில் நடைபெற்றது. இடைக்கமிட்டி தலைவர் பி. கோமதி தலைமை வகித்தார். நிர்வாகி தனம் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். மாவட்டத் தலைவர் பி.ராணி துவக் கவுரையாற்றினார். மாநிலச் செயலாளர் ஆர்.சசிகலா சிறப்பு ரையாற்றினார், செயலாளர் ஆர்.லட்சுமி அறிக்கையை முன் வைத்தார். இம்மாநாட்டில், பெண்கள் பணிபுரியும் இடங் களில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். நிலமற்ற ஏழை  மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும், உள்ளிட்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் இடைக்கமிட்டி தலைவராக எம்.கோமதி, செயலா ளராக லட்சுமி, பொருளாளராக தனம், துணைத்தலைவராக எஸ்.வசந்தா, துணைச்செயலாளராக கே.புஷ்பலதா உள் ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். இதேபோன்று, மாதர் சங்க எலச்சிபாளையம் கிழக்கு  ஒன்றிய மாநாடு, ஒன்றிய துணைத்தலைவர் எம்.சாந்தி  தலைமையில் நடைபெற்றது. மாதர் சங்க மாநிலச் செயலா ளர் சசிகலா சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் ராணி,  மாவட்ட துணைச்செயலாளர் பழனியம்மாள், எலச்சிபாளை யம் மேற்கு ஒன்றியச் செயலாளர் கவிதா உட்பட பலர் கலந்து  கொண்டனர். இம்மாநாட்டில், உள்ளாட்சியில் பெண் பிரதிநிதி கள் சுயமாக செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். வையப்பமலையில் புறநகர் காவல் நிலையம் அமைக்க வேண்டும், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் ஒன்றியத் தலைவராக சாந்தி, செயலாளராக பிரியா, பொருளாளராக மகாலட்சுமி  உட்பட 11 பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட் டது.