tamilnadu

img

தீபாவளியையொட்டி முக்கிய கடைவீதிகளில் குவிந்த பொதுமக்கள்

தீபாவளியையொட்டி முக்கிய கடைவீதிகளில் குவிந்த பொதுமக்கள்

கோவை, அக்.12- தீபாவளி பண்டிகையை முன் னிட்டு, கோவையில் உள்ள முக் கிய கடைவீதிகளில் பொதுமக்கள் குவிந்ததால், காவல் துறை சார் பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப் படுத்தப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு ஒரு வார காலமே உள்ள நிலையில், கோவையில் உள்ள டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, காந்திபுரம்  உள்ளிட்ட முக்கிய கடைவீதிகளில்  வியாபாரம் களைகட்டத் துவங்கி யுள்ளது. அதன்படி, சனியன்று மாலை தொடர்ந்து மழை பெய்த காரணத்தால், பெரிய அளவு கூட் டம் இல்லை. தொடர்ந்து, விடு முறை தினமான ஞாயிறன்று வழக் கமான பண்டிகை கால கூட்டத்தை  விட, ஏராளமான பொதுமக்கள் கடைவீதிகளில் குவிந்தனர். இத னால் முக்கிய கடைவீதிகள் உள்ள சாலைகளின் இருபுறங்களிலும் தற்காலிக தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் நடைபாதை வழி யாக மட்டுமே செல்ல ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. கோவை மாநக ரில் மட்டும் சுமார் 600 போலீசார்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். அதேபோல் அனைத்து கடைவீதிகளிலும் கூடு தல் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் நடமாடும் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு வாகனங் கள் இயக்கப்பட்டு வருகிறது. ஐந்து இடங்களில் உயர் கண் காணிப்பு கோபுரங்கள் அமைத்து  போலீசார் தீவிரமாக கண் காணித்து வருகின்றனர். மேலும், வழிப்பறி கொள்ளையர்கள் நட மாட்டம் இருக்கலாம் என்பதால், சாதாரண உடைகளில் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வரு கின்றனர். கடைவீதிகளில் பொது மக்கள் கூட்டம் அதிகமாக உள்ள தால், முக்கிய சாலைகளில் கடுமை யான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதனை சீர் செய் யும் பணியில் போக்குவரத்து காவ லர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். இதுகுறித்து பொதுமக்கள்  கூறுகையில், தீபாவளி பண்டி கைக்காக குழந்தைகளுக்கு புத் தாடைகள் மற்றும் கவரிங் நகை கள் உள்ளிட்ட பொருட்களை வாங்க வந்தோம். டவுன்ஹால் பகு திகளில் கடுமையான கூட்ட நெரி சல் உள்ளது. அனைத்து கடைகளி லும் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளதால், பொருட்களை வாங் குவதற்கே சிரமமாக உள்ளது. அதேபோல் ஒப்பணக்கார வீதி யில் சாலையை கடக்க ஏதுவாக போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பது வசதியாக உள்ளது. பேருந்து நிலையங்களிலும், கூட் டம் இருப்பதால் பேருந்தில் ஏற முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 5 மணி நேரத்திற்கும் மேலாக கடைவீதிகளுக்குள் சுற்றி வருவதாக தெரிவித்தனர். இதுகுறித்து பேசிய காவல் துறை அதிகாரிகள், பொது மக்களுக்கு ஏதேனும் இடையூறு கள் அல்லது சந்தேகிக்கும் நபர் களை கண்டால் உடனடியாக அங் குள்ள கட்டுப்பாட்டு அறை அல் லது காவலர்களை தொடர்பு கொள்ளுமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகிறோம். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை விட  மக்கள் கூட்டம் அதிகமாக உள் ளது. இதனால் பொதுமக்கள் தங் கள் உடைமைகளை பத்திரமாக வைத்துக் கொள்ள அறிவுறுத்தி வருகிறோம், என்றனர். வியாபாரிகள் கூறுகையில், வழக்கமான பண்டிகை கால கூட் டத்தை விட அதிக அளவு கூட்டம்  வந்துள்ளது. அனைத்து வியாபாரி களுக்கும் இம்முறை நல்ல வியா பாரம் உள்ளது. சனிக்கிழமை மழை பெய்ததால் எதிர்பார்த்த கூட் டம் வரவில்லை, ஆனால் ஞாயிற் றுக்கிழமை வழக்கத்தை விட கடை களுக்குள் நிற்க முடியாத அள விற்கு கூட்டம் வருவதால் மகிழ்ச்சி யாக உள்ளது. இது தீபாவளிக்கு முந்தைய நாள் உள்ள கூட்டம் போல் உள்ளது. இதேபோல் வரும் நாட்களிலும் கூட்டம் அதிக மாக இருக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம், என்றனர். -கவி