சிறுவர் பூங்கா அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
திருப்பூர், செப்.17- தோட்டத்துப்பாளையம் பிரின்ஸ் சிட்டி கார்டன் பகுதி யில் அமைந்துள்ள ரிசர்வ் சைட் நிலத்தில் சிறுவர்களுக் கான விளையாட்டு பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் அமைத்துத்தரக் கோரி இரண்டாம் மண்டல உதவி ஆணையாளரிடம் அப்பகுதி பொதுமக்கள் செவ்வா யன்று மனு அளித்தனர். திருப்பூர் மாநகராட்சி நெருப்பெரிச்சல் அருகே, தோட்டத்துப்பாளையம் பகுதி மக் கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, தோட்டத்துபாளையம் தென்பகுதியில் அமைந்துள்ள சிட்டி கார்டன் குடியிருப்பு பகு தியில் 100 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு ரிசர்வ் சைட் உள்ளது. அந்த இடத்தில் கடந்த வாரம் மாந கராட்சி சார்பில் பூங்கா அமைப்பதாக கூறி 50 க்கும் மேற்பட்ட குழிகளைத் தோண்டி உள்ளனர். இதுகுறித்து கேட்டபோது மரக் கன்றுகள் நடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பின்பு அந்த இடத்தைச் சுற்றி கம்பி வேலி அமைத்துள்ளனர். ஏற்கனவே எங்கள் பகுதி காடாக இருந்து, செப்பனிடப்பட்டு குடியிருப் பானதால், பாம்பு, விஷ பூச்சிகள் தொல்லை உள்ளன. மேலும் எங்கள் குடியிருப்பின் கிழக்கு புறம் ஒரு தோட்டமும், தென்கி ழக்கு பகுதியில் ஓடையும், முட்புதர்களும் உள்ளன. தற்போது மரங்களை மட்டும் நெருக் கமாக நட்டால் மேலும் விஷ ஜந்துக்கள் அச்சு றுத்தல் அதிகரிக்கும். எனவே அந்த இடத் தில் எங்கள் சிட்டி கார்டன் குடியிருப்பு மற்றும் அருகாமையில் இருக்கக்கூடிய சிறுவர்கள் பயன்பெறும் வகையில் விளையாட்டு மைதா னமும், (வாலிபால், சிலம்பம் பயிற்சி, கபடி, கோ கோ, சிறு விளையாட்டுகள்), உடற்ப யிற்சி கூடமும் அமைத்துத் தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் இந்திய ஜன நாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் நிருபன் சக்கரவர்த்தி, ஒன்றியச் செயலாளர் சந்தோஷ், ஒன்றியகுழு உறுப்பினர் மில்டன் உட்பட பொதுமக்கள் திரளானோர் பங்கேற் றனர்.