tamilnadu

img

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8.48 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8.48 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

கோவை, ஜூலை 5- கடந்த நான்கு ஆண்டுகளில், கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8.48 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி கள் வழங்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி கள் நலத்துறை மூலம், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கடந்த நான்கு ஆண்டுகளில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 6764 மாற்றுத்திறனாளி களுக்கு தேசிய அடையாள அட்டைகளும், 12,559 மாற்றுத்திறனாளிகளுக்கு ஒருங்கி ணைந்த தனித்துவம் வாய்ந்த தேசிய அடை யாள அட்டைகளும், 126 மாற்றுத்திறனாளிக ளுக்கு ரூ.30.08 லட்சம் வங்கிக்கடன் மானிய மும், 74 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.30.50 லட்சம் திருமண நிதியுதவியும் வழங்கப் பட்டுள்ளது. மேலும், ஆவின் நிறுவனத்தில் பால் உற்பத்திப் பொருட்கள் விற்பனை மையம் அமைக்க 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.50  லட்சம் நிதியுதவியும், 52 மாற்றுத்திறனாளிக ளுக்கு ரூ.61.62 லட்சம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலிகளும், 533  மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.5.42 கோடி மதிப் பீட்டில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரும், 684 மாற்றுத்திறனா ளிகளுக்கு ரூ.1.10 கோடி மதிப்பீட்டில் அலை பேசிகளும், 1162 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.39.65 லட்சம் மதிப்பீட்டில் இதர உதவி உப கரணங்களும் என மொத்தம் 21,963 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.8.48 கோடி மதிப்பீட்டில்  நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.