கிரமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிடுக
நெடுஞ்சாலைத்துறை மாவட்ட மாநாடு வலியுறுத்தல்
கோவை, செப். 13- கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்க மாநாடு வலியுறுத்தியுள்ளது. பொள்ளாச்சியில் உள்ள வங்கி ஊழியர் சங்கக் கட்டிடத்தில் தமிழ் நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் 9 ஆவது கோட்ட மாநாடு சனியன்று நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு கோட்டத் தலைவர் எம். வெற்றி வேல் தலைமை வகித்தார்.கோட் டத் துணைத் தலைவர் எம். வீரமுத்து அஞ்சலி தீர்மானத்தை வாசிக்க, கே. வெள்ளியங்கிரி வரவேற்றார். மாநிலத் தலைவர் மா. பாலசுப்ர மணியம் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். கோட் டச் செயலாளர் ச. ஜெகநாதன் பணி அறிக்கையையும், பொருளாளர் சின்ன மாரிமுத்து வரவு செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் பி. செந்தில் குமார், மாநிலச் செயற்குழு உறுப்பி னர் ஆர். ரவி, வட்டக் கிளைத் தலை வர் கே. பத்மநாபன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில், சாலைப் பணியாளர்க ளின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயர்நீதிமன்ற ஆணை யின்படி பணிக்காலமாக முறைப்ப டுத்தி ஆணை வழங்க வேண்டும். இறந்த சாலைப் பணியாளர்களின் குடும்ப வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்ய விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாகப் பணி வழங்க வேண் டும். நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட்டு, நெடுஞ்சாலைகளை அரசே நேரடி யாகப் பராமரித்து, கிராமப்புற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும். சாலைப் பணியாளர்களுக்குத் தொழில்நுட்பக் கல்வித் திறன் பெறாத ஊதியம் மற்றும் தர ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். பொள்ளாச்சியைத் தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. மாநாட்டில், கோட்டத் தலைவ ராக வி.சின்ன மாரிமுத்து, செயலா ளராக ச.ஜெகநாதன், பொருளாள ராக சந்திரபோஸ், துணைத் தலை வர்களாக ஜானகிராமன், கே. வெள் ளிங்கிரி, மற்றும் துணைச் செயலா ளர்களாக டி. தேவராஜ், ஏ. ஆறுச் சாமி உள்ளிட்ட எட்டு பேர் புதிய நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர். நிறைவாக, மாநில பொதுச் செயலாளர் ஆ. அம்சராஜ் நிறைவுரை ஆற்றினார்.