வீட்டுமனை கேட்டு விதொச மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம்
சேலம், ஆக.12- வீட்டுமனை மற்றும் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். வீடு இல்லாததால், ஒரே வீட்டில் கூட்டு குடும்பமாக குடியிருந்து வரும் மக்களுக்கும், நீண்ட காலமாக வாடகை வீட்டில் நெருக்கடியில் வாழ்ந்து வரும் ஏழை மக்களுக்கும், அரசுக்கு சொந்த மான புறம்போக்கு நிலங்களை மனை யிடமாக ஒதுக்கி தர வேண்டும். மேலும், அரசு சார்பில் வீடு கட்டித்தர வேண்டும் என வலியுறுத்தி அகில இந்திய விவசா யத் தொழிலாளர் சங்கத்தினர் செவ்வா யன்று மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் வட்டச் செயலாளர் சி.எஸ்.பழனியப்பன் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எஸ்.கே.சேகர் துவக்கவுரையாற்றினார். இதில் சங்கத்தின் மாவட்டத் தலை வர் ஜி.கணபதி, மாநிலக்குழு உறுப்பி னர் வி.தங்கவேல், சிபிஎம் வட்டச் செய லாளர் கே.நடராஜன், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பவித்திரன், விசைத்தறித் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.வீராசாமி உட் பட திரளானோர் கலந்து கொண்டனர். ஈரோடு ஈரோடு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் தாலுகா செயலாளர் என். நாகராஜன் தலைமையில் தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.விஜயராகவன் மற்றும் இளங்கோ, முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.