tamilnadu

img

ஜல்லிபட்டி மருத்துவமனையை திறக்க வலியுறுத்தி போராட்டம்

ஜல்லிபட்டி மருத்துவமனையை திறக்க வலியுறுத்தி போராட்டம்

திருப்பூர், செப்.8 - உடுமலை ஒன்றியம் ஜல்லிபட்டியில் கட்டி முடித்து திறக்கப்படாத அரசு  மருத்துவமனையை உடன டியாக திறந்து மக்கள் பயன் பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோரிக்கை முழக்கப் போராட்டம் நடத்தினர். ஜல்லிபட்டியில் திங்களன்று மாலை நடை பெற்ற போராட்டத்திற்கு சங்கத்தின் உடு மலை ஒன்றியத் தலைவர் ஆர்.சங்கீதா தலைமை ஏற்றார். ஜல்லிப்பட்டி அரசு மருத்து வமனையை விரைந்து திறக்க வேண்டும்.  தேவையான மருத்துவர்கள் செவிலியர்கள்  உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் நிய மிக்க வேண்டும், எருசினம்பட்டி, அமராவதி, பெரிய வாளவாடி, செல்லப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் இருக்கும் ஆரம்ப சுகா தார நிலையங்களில் தேவையான மருத்து வர்கள், பணியாளர்கள் நியமிக்க வேண் டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி  முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாதர் சங்க  உடுமலை ஒன்றியச் செயலாளர் ஆர்.கல்பனா,  மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.சித்ரா  ஆர்.வி.வி.ராதா ஆகியோர் உரையாற்றினர்.  மாதர் சங்க கோரிக்கை முழக்க போராட் டத்தை வாழ்த்தி தோழமை அமைப்புகளின் நிர்வாகிகள் பேசினர். நூற்றுக்கும் மேற்பட்ட  பெண்கள் பங்கேற்றனர். ஜல்லிபட்டி செய லாளர் கௌசல்யா நன்றி கூறினார்.