வனத்துறையை கண்டித்து மறியல்
உதகை, ஜூலை 23- ஒற்றை காட்டு யானை தாக்கி மூதாட்டி உயிரிழந்த நிலை யில், வனத்துறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே நெல்லியாளம் பகுதி யில் செவ்வாயன்று அதிகாலை வனப்பகுதியிலிருந்து வெளி யேறிய, தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதியில் உலா வந்த ஒற்றை காட்டு யானை தாக்கியதில் லட்சுமி (65) என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அறிந்த அப் பகுதி மக்கள் காட்டு யானையை விரட்டி வனத்துறையின ருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறையினர் உயிரிழந்த மூதாட்டியின் உடல் மீட்டு பிரேத பரி சோதனைக்காக பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் தேவாலா, பாடந்துறை ஆகிய பகுதிகளில் காட்டு யானை தாக்கி கடந்த மாதம் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் மற்றொரு நபர் உயிரிழந்த சம்ப வம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது. இதனால், காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க வனப்பகுதியை சுற்றிலும் அகழிகள் அமைக்க வேண் டும். வனத்துறையினர் ரோந்துப் பணிகளை அதிகப்படுத்தி யானை - மனித வனவிலங்கு மோதலை கட்டுப்படுத்த நடவ டிக்கை எடுக்க வேண்டும் என செவ்வாயன்று கொளப்பள்ளி பகுதியில் சாலையில் பொதுமக்கள் அமர்ந்து வனத்துறையி னரை கண்டித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.