tamilnadu

img

பாறைக்குழியில் குப்பை கொட்ட எதிர்ப்பு: காத்திருப்புப் போராட்டம்

பாறைக்குழியில் குப்பை கொட்ட எதிர்ப்பு: காத்திருப்புப் போராட்டம்

திருப்பூர், ஜூலை 7 - திருப்பூர் நெருப்பெரிச்சல், ஜி. என். கார்டன் அருகே உள்ள  பாறைக்குழியில் மாநகர குப்பைக் கழிவுகள் கொட்டப்படுவதை உடன டியாக நிறுத்தக் கோரி ஊர் பொது  மக்கள், குடியிருப்போர் சங்கங் கள், அனைத்து அரசியல் கட்சிகள்  திங்களன்று காத்திருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில வாரங்களாக ஜி.என். கார்டன் பாறைக்குழியில் குப்பை  கொட்டுவதை கண்டித்து தொடர்  போராட்டங்கள் நடந்து வருகின் றன. கருப்புக் கொடி ஏந்திய போராட்டம், கடையடைப்பு, குப்பை லாரி சிறைப்பிடிப்பு என மாநகராட்சியின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தொடர் போராட்டங்கள் நடத்தப் பட்டது. மேலும், அனைத்து வீடுகளிலும்  ஞாயிற்றுக்கிழமை முதல் குப்பை கொட்டுவதை நிறுத்தும் வரை  அனைத்து வீடுகளிலும் கருப்பு கொடி பறக்க விடப்படும். திங்க ளன்று காலை 9 மணி முதல்  மாலை  6 மணி வரை ஜிஎன் கார்டன்  நுழைவு  வாயில் அருகில் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது என அறி விக்கப்பட்டிருந்தது. அதன்படி 200 க்கும் மேற்பட்டோர் திங்களன்று காத்திருப்புப் போராட்டத்தில் ஈடு பட்டனர். மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த னர். இதுகுறித்து ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஆ.சிகாமணி கூறு கையில், திருப்பூர் மாநகராட்சி 2  ஆவது மண்டலம் 4 ஆவது வார் டுக்குட்பட்ட பகுதியில் உள்ள  தனியார் பாறைக்குழியில் திருப்பூர்  மாநகராட்சி குப்பைக்கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இந்த  பாறைக்குழியில் இருந்து 30 மீட்டர்  தொலைவில் 3000 திற்கும் மேற்பட்ட  குடியிருப்புகள் உள்ளன. 200 மீட்டர்  தொலைவில் தினமும் நூற்றுக்க ணக்கான நோயாளிகள் மற்றும் கர்ப்பிணிகள் சிகிச்சைக்கு வந்து செல்லும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. 70 மீட்டர் தொலைவில் பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளது. 20 மீட்டர் தொலைவில் நூற்றுக்கணக்கான ஆவண மற்றும் பத்திர எழுத்தர்  அலுவலகங்களும் செயல்படுகி றன. 200 மீட்டர் தொலைவில் விவசா யத்திற்கு பயன்படும் 4 கிணறுகள்  உள்ளன. 600 மீட்டர் தொலைவில் 2000 குழந்தைகள் பயிலும் மேல்நி லைப்பள்ளி செயல்பட்டு வருகி றது. திடக்கழிவு மேலாண்மைத் திட் டம் மூலம் மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை கழிவு களைப் பாதுகாப்பாக கையாள் வதை விடுத்து, மக்கள் நெருக்க மாக வசிக்கும் பகுதிகளில் குப் பைக்கழிவுகளை கொட்டுவது சட்ட  விரோதம் என தெரிந்தும் கொட்டப் படுகிறது. குப்பைக்கழிவுகள் அழுகி அதிலிருந்து வெளியாகும் துர்நாற்றத்தினால் எங்கள் பகுதி  மக்கள் வீட்டின் ஜன்னல் கதவுகளை  கூட திறந்து வைக்க முடியாமல், இர வும், பகலும் மூடியே வைத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே உடனடியாக குப்பைக் கழிவுகளை இந்த பாறைக்குழியில் கொட்டுவதை நிறுத்தி எங்கள் பகு தியின் சுகாதாரத்தையும், அமைதி யையும் உறுதி செய்ய அரசு நட வடிக்கை எடுக்க வேண்டும் என் றார்.